அரசுப்பள்ளி ஆசிரியை செய்த தரமானச் செயல்!! குவியும் பாராட்டுக்கள்!!
அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் தனது சொந்த செலவிலேயே பள்ளிக்கு 10 கழிப்பறையை கட்டிக் கொடுத்த நிகழ்வு,பாராட்டையும் அவரை நல்ல எண்ணத்தையும் பறைசாற்றுகிறது.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்துள்ள ஐயங்குணம் அரசுப்பள்ளி,
கடந்த 2010 ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியிலிருந்து மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.
இப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை சுமார் 276 மாணவிகளும், 180 மாணவர்களும்,மொத்தம் 456 மாணவர்கள் படித்து வருகின்றனர்.இப்பள்ளியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக்கல்வித்துறை சார்பில் கழிப்பறை வசதி செய்து தரப்பட்டது.இருப்பினும் அந்த ஊரிலிருக்கும் இளைஞர்கள் இரவு நேரங்களில் கழிப்பறையை சேதப்படுத்தி உள்ளனர்.இதனால் அப்பள்ளியில் படிக்கும் மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள்,முறையான கழிப்பறை இல்லாததால் பெரும் அவதிக்குள்ளாகினர்.
கடந்த 2006 ஆம் ஆண்டு இடைநிலை ஆங்கில ஆசிரியராக பணிக்கு சேர்ந்த ஆனிரீட்டா என்பவர், மாணவிகளும் சக ஆசிரியர்களும் சரியான கழிப்பறை வசதி இல்லாமல் பெரும் துயரத்தை கருத்தில் கொண்டு தனது சொந்த செலவில் கழிப்பறையை அமைத்து தர முடிவு செய்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அப்பள்ளி தலைமை ஆசிரியரின் ஒப்புதலுடன்,பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்து,தனது சொந்த செலவில் மாணவிகளுக்கான 8 கழிப்பறை,ஆசிரியர்களுக்கான 2 கழிப்பறை என மொத்தம் 10 கழிப்பறையை சுமார் 6 லட்சத்து 40 ஆயிரம் செலவில் கட்டியுள்ளார்.மேலும் இந்த கழிப்பறையில் 24 மணி நேரமும் தண்ணீர் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.இது மட்டுமின்றி 10 கழிப்பறைகளுக்கு தேவையான பக்கெட் மக் போன்ற அனைத்து பொருட்களும் தனது சொந்த செலவில் வாங்கிக் கொடுத்துள்ளார்.ஆசிரியையின் இந்த தரமான செயல் சமூக வலைதளங்களில் பரவி வருவதோடு அவருக்கு பாராட்டுகளும் குவிந்து வருகின்றன.