ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதியின் அடுத்த படம்!! சீக்ரெட் ரிலீசானதால் குஷியான ரசிகர்கள்!

0
157

இளையதளபதி விஜய் மற்றும் ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் இயக்கிய படங்களில் சில  படங்கள் வெற்றி திரைப்படங்களாக அமைந்துள்ளது. கத்தி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணியில் வெளிவந்த சர்க்கார் திரைப்படம் நல்ல வசூலை தந்திருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை அளித்தது. 

இப்படத்தின் கதையை கேட்ட தளபதி ஏ ஆர் முருகதாஸ் இடம் இப்படத்தை  இயக்கினால் வரும் சிக்கல்களை எதிர் கொள்வீரா என்று கேட்டார். 

நான் பார்த்துக்கொள்கிறேன் என்று இயக்குனர் உறுதியளித்த பின்னரே இப்படம் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. 

சமீபத்தில் இவர்கள் கூட்டணியில் வெளிவந்த திரைப்படங்கள் அரசியல் சார்ந்ததாக அமைந்ததால்  மக்கள் மத்தியில் ஒருவித சலிப்புத் தன்மையை ஏற்படுத்தி உள்ளது.   

ஆகையால் இருவரும் சேர்ந்து இப்போது  இயக்க போகும் திரைப்படம் அரசியல் சார்ந்தது அல்ல எனும் முக்கிய முடிவை ரசிகர்களிடம் தெரிவித்துள்ளனர். இதை  கேள்விப்பட்ட ரசிகர்கள் தளபதி 65 திரைப்படத்தை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர். 

 

Previous articleஇயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு சூப்பர்ஸ்டாரை கழட்டி விட கமல் கொடுத்த யோசனை! அடடா இது நல்ல ஐடியாவா இருக்கே!
Next articleபாஜக மூத்த தலைவருக்கு கொரோனா தொற்று!