கந்தனுக்கு வேல் குத்தி அரை அம்மணமாக ஆவடி டவுனில் வலம் வர தயார் -திமுக ஆ.ராசா!

Photo of author

By Parthipan K

கந்தனுக்கு வேல் குத்தி அரை அம்மணமாக ஆவடி டவுனில் வலம் வர தயார் -திமுக ஆ.ராசா

சில நாட்களுக்கு முன்பு திருத்தணியில் தேர்தலுக்காக கிராமசபை கூட்டம் நடத்திய திரு ஸ்டாலின் அவர்களுக்கு திருத்தணியை சேர்ந்த திமுக நிர்வாகி ஒருவர் வெள்ளி வேலை திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு பரிசாக கொடுத்தார்.

அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவியது .மற்றும் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானது .காரணம் கடவுள் மறுப்பு பேசும் அண்ணா, பெரியார் கலைஞர் அவர்களின் வழியில் வந்த மு க ஸ்டாலின் அவர்கள் தமிழ் கடவுள் என்று போற்றப்படும் முருகன் அவர்களின் ஆயுதமான வேலை பிடித்து போட்டோக்கு போஸ் கொடுத்ததால், மக்களின் இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் என் வீட்டில் உள்ள என்னுடைய மனைவியும் கோவிலுக்குச் செல்வார், என்றும் நாங்கள் இந்து மதங்களுக்கு எதிரி அல்ல என்றும் கலவரத்தை தூண்டும் ஆர்எஸ்எஸ்காரர்களுக்கும் சனாதனத்துக்கு மட்டுமே நாங்கள் எதிரி என்றும் பேசியிருந்தார். மேலும் திமுகவின் துரைமுருகன் அவர்கள் ஸ்டாலின் பிடித்திருக்கும் வேல் எடப்பாடி பழனிச்சாமியை சூர சம்ஹாரம் செய்யும் என்றும் பேட்டி அளித்திருந்தார்.

ஆனால் இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளாத பாஜக நிர்வாகிகள் ஸ்டாலின் ஓட்டுக்காக தான் இவ்வாரு வேலை கையிலேந்தி நாடகம் நடத்துகிறார் என்றும், மக்கள் யாரும் ஸ்டாலின் நாடகத்தை நம்ப மாட்டார்கள் என்றும் பேசியிருந்தார்கள். சில மாதங்களுக்கு முன்பு தான் பாஜக தலைவர் எல். வேல்முருகன் அவர்கள் வேல்யாத்திரையை என்ற பேரணியை திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், திமுகவின் ராசா அவர்கள் வேல் என்ன பாஜவுக்கு மட்டும்தான் சொந்தமா? எங்களுக்கெல்லாம் சொந்தம் இல்லையா? என்றும் தமிழ் கடவுள் முருகனுக்கு மொட்டை அடித்து அலகு குத்தி அரை நிர்வாணமாக கந்தனுக்கு அரோகரா போட தயார். ஆனால் இந்து அமைப்புகளும் பாஜகவினர் களும் தமிழ் கடவுளான முருகனுக்கு சமஸ்கிருதத்துக்கு பதில் தமிழில் வேதம் ஊத ஏற்பாடு செய்தால் அதை திராவிட கழகத்தில் பயின்ற இந்த ராசா அரை நிர்வாணமாக ஆவடியில் அலகு குத்தி நடை பயணம் செய்வான் என்று பேசியுள்ளார்.
மேலும் 20 கோடியில் ஜெயலலிதாவுக்கு சமாதி கட்டிய எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஜெயலலிதாவின் கல்லறையில் உச்ச நீதிமன்றம் சொன்னபடி உங்க ஆத்தா ஜெயலலிதா ஒரு குற்றவாளி என்று எழுத முடியுமா என்று பேசியிருந்தார்.