ஆ ராசாவின் அநாகரிக பேச்சு! இந்து முன்னணி கண்டனம்!
திமுக எம்பி ஆ.ராசா கப்பலோட்டிய தமிழன் வ உ சி யின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியதை இந்து முன்னணி வன்மையாக கண்டிக்கிறது என மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நீலகிரி பாராளுமன்ற உறுப்பினரும் திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஆ.இராசா அவர்கள் சமீபத்தில் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி. அவர்களின் புகழுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார்.
கடந்த ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது கட்சித் தலைவர்கள் என்ன பேசுவார்களோ என காலையில் கண்விழிக்கும் போதே பதட்டமாக இருக்கிறது. இதனால் சரியாக தூக்கம் கூட வருவதில்லை எனக் கூறினார். இருப்பினும் திமுக தலைவர்களின் பேச்சு நாளுக்கு நாள் எல்லை மீறிக்கொண்டே இருக்கிறது.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி தனது சொத்துக்களை விற்று பசியாற்றிய வள்ளல்.அனைத்தையும் நாட்டுக்காக இழந்து வறுமையில் வாடிய போதிலும் தனது இறுதி காலம் வரை யாரிடமும் கையேந்தி வாழவில்லை.என் நிலையில் அவரது நேர்மைக்கும் எளிமைக்கும் களங்கமூட்டம் வகையில் “ஈவேராவிடம் தன் மகனின் வேலைக்காக வ.உ.சி. கெஞ்சினார்” என்று திமுக எம்.பி ஆ.ராசா கூறியது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இது குறித்து தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனி இது போன்ற கருத்துக்களை திமுகவினர் பேசுவதை தடை செய்யவும் இந்து முன்னணி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்” தெரிவித்தார்.