“2029 நாடாளுமன்ற தேர்தலில் வாரிசு கட்சியே இருக்காது” – அண்ணாமலை பேச்சு!

0
237
#image_title

“2029 நாடாளுமன்ற தேர்தலில் வாரிசு கட்சியே இருக்காது” – அண்ணாமலை பேச்சு!

சென்னை பூந்தமல்லியில் உள்ள ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரியில், முதல் முறை வாக்காளர்களான மாணவர்களுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உரையாடினார். அப்போது அவர் ” ராமர் கோயிலுக்கு வருடந்தோறும் ஐந்து கோடி பேர் வருவார்கள் இதன் மூலம் ஒன்றிய உத்திரப்பிரதேச மாநிலத்திற்கு 25 ஆயிரம் கோடி வருவாய் கிடைக்கும். மேலும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் வாரிசு கட்சிகள் தோல்விகளை தழுவும். 2029 ஆம் ஆண்டு தேர்தலில் வாரிசு கட்சிகளே இருக்காது” என்று தெரிவித்தார்.

மேலும் புதிய தொழில்நுட்ப முன்னேற்றத்தை ஏற்றுக் கொண்டு, அதற்கு தங்களைத் தயார்படுத்திக் கொள்வதும், எதிர்காலத்திற்கான முக்கியமான உள்கட்டமைப்பை உருவாக்குவதும், புதிய கண்டுபிடிப்புக்களைக் கொண்டு வருவதும் என, பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் சிந்தனையில் உள்ள வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதிலும், நமது நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் சரியான தலைவரைத் தேர்ந்தெடுப்பதிலும், முதல் முறை வாக்காளர்களான இளம் தலைமுறையினரின் பொறுப்புகள் குறித்து விவரித்தார்.

author avatar
Preethi