பீட்ரூட் பொரியலில் சைட் டிஷ் ஆக கிடந்த எலி தலை! ஓட்டலை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

Photo of author

By Parthipan K

பீட்ரூட் பொரியலில் சைட் டிஷ் ஆக கிடந்த எலி தலை! ஓட்டலை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

ஆரணி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் முரளி. இவருடைய உறவினர் சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டார். அதனால் அவருடைய படத்தை வைத்து குடும்பத்தினர்  வழிபாடு செய்யும் நிகழ்ச்சி  நடைபெற்றது.அப்போது அவர்கள் உணவு படைக்க  ஆரணி பழைய பேருந்து நிலையத்தை அடித்த கோட்டை மைதானம் செல்லும் வழியில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் ஆர்டர் செய்துள்ளனர்.

அதனையடுத்து ஓட்டல் நிர்வாகம் ஆடர் செய்த உணவுகளை முரளி வீட்டிற்கு டோர் டெலிவரி செய்துள்ளனர். மேலும் அந்த உணவை படையலிட்டு வணங்கிய பிறகு அந்த நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்கள் அனைவரும் சாப்பிட்டனர். அதன் பிறகு மீதமுள்ள உணவை வேறு பாத்திரத்தில்  மாற்றியபோது பீட்ரூட் பொரியலில் எலி தலையின் ஒரு துண்டு கிடந்தது.அதனை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து ஓட்டல் உரிமையாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.ஆனால் உணவை பார்வையிட உணவகத்தில் இருந்து யாரும் வரவில்லை.அதனால் ஆத்திரம் அடைந்த முரளி உறவினர்கள் மற்றும் அந்த பகுதி நகரமன்ற உறுப்பினர்கள் இணைந்து எலியின் தலை கிடந்த உணவுடன் உணவகத்திற்கு சென்று முற்றுகையிட்டனர்.அதன் பிறகு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆரணி போலீசார்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அந்த தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள் .இதனையடுத்து உணவு பாதுகாப்பு ஆதிகாரிகள் ஓட்டலுக்கு சென்று அந்த உணவின் மாதிரி எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.