ஆ.ராசா,பொன்முடி விவகாரம்: வார்த்தையை அளந்து பேசுங்கள்!! திமுக நிர்வாகிகளை எச்சரித்த ஸ்டாலின்!

ஆ.ராசா,பொன்முடி விவகாரம்: வார்த்தையை அளந்து பேசுங்கள்!! திமுக நிர்வாகிகளை எச்சரித்த ஸ்டாலின்!

சில நாட்களுக்கு முன்பு திமுக துணை பொதுசெயலாளர் ஆ.ராசா இந்துக்கள் குறித்து அவதூறாக பேசினார்.பாஜக மற்றும் பல கட்சிகள் அவர் அவ்வாறு பேசியதற்கு கைது செய்யும் படி கூறியது.ஆனால் திமுக எதையும் கண்டுக்கொள்ளாமல் அமைதியே காத்தது.அந்த காண்டர்வைசி முடிவதற்குள்ளேயே, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அரசு விழாவில் கலந்துக்கொண்ட பெண்களை பார்த்து நீங்கள் ஓஸி பஸ்ஸில் தானே பயணம் செய்கிறீர்கள் என பேசியது தற்பொழுது பூதாகராமாக வெடித்துள்ளது.தற்பொழுது, பேருந்துகளில் பெண்களை தவறாக பார்த்தாலோ அல்லது தவறாக பேசினாலோ அவர்களை பேருந்தில் இருந்தே இறக்கி விட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார்.இந்த விதிமுறையானது அப்பேருந்தின் நடத்துனர் மற்றும் பேருந்து ஓட்டுனர் இருவருக்கும் பொருந்தும் என கூறியிருந்தனர்,இந்த நிலையில் திமுக அமைச்சரே இவ்வாறு பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதனால் ஸ்டாலின் அவர்களது நிர்வாகிகளை எச்சரித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

உண்மை என்று வாய் திறந்து சொல்வதற்குள்ளாகவே பொய் உலகை வலம் வந்துவிடும்! ‘வெட்டி – ஒட்டி – திரித்து’ பொய்யில் திளைக்கும் நச்சு சக்திகளின் தீயநோக்கத்திற்கு இடம்தராமல், கழகத்தினர் சொற்களை மிகக் கவனமாகக் கையாள வேண்டும். மக்கள் நலன் எனும் பொறுப்பை உணர்ந்து பயணத்தைத் தொடர்ந்திடுவோம்.

நச்சு அரசியல் சக்திகளுக்கு இடமளிக்கும் பேச்சுகளை தவிர்ப்போம் என்றவகையில் பதிவிட்டுள்ளார்.இவ்வாறு பேசியவர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்காமல் மாறாக  அறிக்கை வெளியிட்டுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது என அரசியல் சுற்றுவட்டாரங்கள் கூறுகின்றது.

Leave a Comment