4 வருடத்தில் 139 திரைப்படங்கள் நடித்து சாதனை படைத்த நடிகர்!! திரையுலகமே வியந்து பார்த்து தருணம்!!

Photo of author

By Gayathri

1971 ஆம் ஆண்டு முதன் முதலில் தன்னுடைய திரை பயணத்தை துவங்கிய நடிகர் மம்முட்டி அவர்கள், இதுவரையில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார்.

இவர் வெள்ளி திரையில் மட்டுமின்றி சின்னத்திரைகளும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் இதுவரை 3 தேசிய திரைப்பட விருதுகள், 7 கேரளா மாநில திரைப்பட விருதுகள், 13 தென்னிந்திய பிலிம் பேர் விருதுகளை பெற்றுள்ளார். மேலும், இவர் 1998 -ஆம் ஆண்டு கலைக்கான பத்ம ஸ்ரீ விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவருடைய வாழ்நாள் சாதனையாக 4 வருடங்களில் 139 படங்களை வெற்றிகரமாக நடந்து முடித்துள்ளார். ஒருவர் சாதாரணமாக ஒரு வருடத்திற்கு நான்கு முதல் ஐந்து படங்கள் மட்டுமே நடித்து திரையிட கடினப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், 80 களிலேயே இவர் இந்த சாதனையை செய்து காட்டியுள்ளார்.

4 வருடங்களில் ஒவ்வொரு வருடமும் இவர் நடித்த படங்களின் எண்ணிக்கை பின்வருமாறு :-

✓ 1983 ஆம் ஆண்டு 36 திரைப்படங்களை இவர் நடித்த முடித்துள்ளார்.

✓ 1984 ஆம் ஆண்டு 34 திரைப்படங்களை இவர் நடித்த முடித்துள்ளார்.

✓ 1985 ஆம் ஆண்டு 34 திரைப்படங்களை இவர் நடித்து முடித்துள்ளார்.

✓ 1986 ஆம் ஆண்டு 35 திரைப்படங்களை இவர் நடித்த முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.