அன்றைக்கே கரகாட்டக்காரன் படத்தால் உருவாக்கப்பட்ட சாதனை!! இன்று வரை யாராலும் அதை முறியடிக்க முடியவில்லை!!

Photo of author

By Gayathri

கங்கை அமரன் உடைய இயக்கத்தால் 1989 ஆம் ஆண்டு எதார்த்தமான கதைப்போக்கில் உருவான படம் தான் கரகாட்டக்காரன். இந்த படத்தில் புதுமுக நடிகையாக கனகா அவர்கள் அறிமுகமான முதல் படமும் கரகாட்டக்காரன் ஆகும்.

கரகாட்டக்காரன் படத்தினை இப்பொழுது உடனடியாக அனைவருக்கும் ஞாபகப்படுத்த வேண்டும் எனில் வாழைப்பழ காமெடி தான் மனதில் சட்டு என்று தோன்றும். அந்த அளவிற்கு கவுண்டமணி மற்றும் செந்தில் என்னுடைய காமெடி சீன்கள் மக்களின் மனதை கொள்ளை கொண்டுள்ளன என்றே கூறலாம்.

ஒரு பக்கம் படத்தில் காமெடி சீன் என்றால் மறுபக்கம் படத்தில் உள்ள பாட்டின் மூலம் அனைவரது மனதையும் இளையராஜா அவர்கள் ஆட்கொண்டு விட்டார் என்றே கூறலாம்.

இந்த படத்தில் வரும் அனைத்து பாடல்களும் வெற்றி பெற்ற பாடல்களே.அவை, மாங்குயிலே பூங்குயிலே, இந்த மான் உந்தன் சொந்த மான், ஊருவிட்டு ஊருவந்து, பாட்டாலே புத்தி சொன்னார், முந்தி முந்தி விநாயகனே, மாரியம்மா மாரியம்மா, குடகு மலை காற்றில் வரும் என்ற பாடல்கள் தான். இந்த படம் 90களில் ஆரம்பத்தில் வெகு நாட்களாக ஓடிய படமாக்கும். ஆனால் தற்பொழுது 21 களிலும் இந்தப் பாடலை ரசிக்கும் ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கரகாட்டக்காரன் படத்தை பொருத்தவரை மிக எளிமையான கதைதான். அக்கா தம்பி சிறுவயதிலேயே பிரிந்துவிட பின்னர் அக்கா மகன், மாமன் மகள் காதலிக்கின்றனர். இருவரது குடும்பமுமே கரகாட்ட கலையை பின்னணியாக கொண்டது. நாயகியை காதலிக்கும் கிராமத்து பண்ணையார் அவர்களை அழிக்க முயற்சிப்பதே கிளைமாக்ஸ் என எந்த டிவிஸ்ட்டும், பரபரப்பும் இல்லாத சாதாரணமான எளிய நடையில் தான் கங்கை அமரன் அவர்கள் இப்படத்தை கொண்டு சென்றுள்ளார். அதனால் தானோ என்னவோ இன்றளவும் அனைத்து வயதினரையும் இந்த படம் தன்னகத்தே கொண்டுள்ளது.

இந்த படத்தினை எடுக்க 1989 களில் 35 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த படத்தினை சிவாஜி கணேசன் மற்றும் பத்மினி நடித்த தில்லானா மோகனாம்பாளின் மற்றொரு வர்ஷன் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கும் இதற்கும் கதைக்களம் சற்றே வேறுபட்டு இருக்கும்.

அக்காலத்தில், இவ்வளவு செலவு செய்து எடுக்கப்பட்ட படம் 495 நாட்கள் வரை திரையரங்குகளில் ஓடி 5 கோடி ரூபாய் வசூலை பெற்று மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது. மேலும் இன்று வரையில் இந்த சாதனையை முறியடிக்க எந்த படத்தாலும் முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.