முன்னாள் முதல்வர் கையில் ரகசிய சிப் பொருத்திய ரிங்! இதையெல்லாம் கண்காணிக்க தான் இதனை உபயோகம் செய்கிறேன்!

0
169
A ring with a secret chip on the hand of the former chief minister! I use it just to keep track of it all!
A ring with a secret chip on the hand of the former chief minister! I use it just to keep track of it all!

முன்னாள் முதல்வர் கையில் ரகசிய சிப் பொருத்திய ரிங்! இதையெல்லாம் கண்காணிக்க தான் இதனை உபயோகம் செய்கிறேன்!

ஆந்திர பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு அம்மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்திற்கு சென்றுள்ளார். அவ்வாறு சென்ற பொழுது வழக்கம் போல் இல்லாத ஒன்றை அவரிடம் கண்டு அனைவரும் பேசி வந்துள்ளனர். அது பற்றி அவரிடமே அவரது கட்சியினர் கேட்டுள்ளனர். அவர் புதிதாக ஓர் மோதிரம் ஒன்றை அணிந்துள்ளார். அது பற்றிய தகவல் தான் அரசியல்வாதிகள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. அது குறித்து அவரே விரிவான விளக்கத்தை கூறியுள்ளார். தான் அணிந்திருப்பது பிளாட்டினம் மோதிரம் என்றும் ,அதில் கம்ப்யூட்டர் சிப் பொருத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

தனது ஆரோக்கியத்தை கண்காணிப்பதற்காக இவ்வாறான மோதிரத்தை அணிவித்துள்ளதாகவும் தெரிவித்தார். நான் எந்த நேரத்தில் தூங்குகிறேன், எனது இதயத்துடிப்பு எந்த அளவிற்கு உள்ளது என அனைத்தையும் இந்த மோதிரத்தில் உள்ள சிப் கண்காணிக்கும் என்று தெரிவித்துள்ளார். இதுபோல மார்க்கெட்டில் பல விதங்களில் மோதிரங்கள் மற்றும் இதர பொருள்கள் உள்ளதாகவும் கூறினார். தான் இவ்வாறான அணிகலனை உபயோகிப்பது மட்டுமல்லாமல் தனது உறுப்பினர்களும் அவரவர் உடல்நிலை சீராக உள்ளதா என்பதை தெரிந்து கொள்ள இதுபோன்ற அணிகலனை உபயோகிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

Previous articleகளை கட்டிய மாட்டுச்சந்தை வியாபாரம்! கோடிகணக்கில் விற்ற மாடுகள்!!
Next articleகல்யாண வயசில் கள்ளச்சாராயம் விற்ற வாலிபர் கைது!!