மனித கழிவுகளை மனிதர்கள் அகற்றுவதற்கு தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டாலும் தொடர்ந்து மலக்குழி மரணங்கள் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன.2013 முதல் 2019 ஆம் ஆண்டு வரை 174 பேர் இதனால் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இதை தடுக்கவே திருவனந்தபுரம்,கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கோவை மாவட்டத்திற்கு போனவருடம் பாண்டிகூட் 2.0 என்ற அதிநவீன ரோபோ வழங்கப்பட்டது.இதனை தொடர்ந்து தற்பொழுது மேலும் 5 ரோபோக்கள் வழங்கப்பட்டுள்ளது.இந்த ரோபோவின் மதிப்பு ரூ.2.12 கோடி ஆகும்.இதில் கோவை மாநகராட்சி சார்பில் ரூ.20 லட்சம் செலவிடப்பட்டுள்ளது. கோவையில் உள்ள ஐந்து மாநகராட்சிக்கு 5 பாண்டிகூட் ரோபோக்கள் வழங்கப்பட்டுள்ளது.விரைவில் தமிழகத்தில் உள்ள 34 நகரங்களுக்கும் இந்த ரோபோ வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ரோபோவை உருவாக்கிய ஜென் ரோபாட்டிக்ஸ் நிறுவனத்தினர் கூறியதாவது,சமீபத்திய ஆய்வின்படி தூய்மைப்பணியாளர்களுக்கு அவர்கள் சுத்தம் செய்யும் கழிவுகள் மூலம் கொரோனா பாதிப்பு பரவும் அபாயம் உள்ளது.இந்த ரோபோவை எளிய முறையில் தூய்மைப்பணியாளர்கள் கையாளலாம். இந்த ரோபோ மனிதர்களை விட அதிக திறனுடன் கழிவுகளை அகற்றும்.மேலும் இந்த ரோபோவானது குஜராத் அசாம்,ஹரியானா,உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இந்த ரோபோ பாதாள சாக்கடைகளை ஆய்வு செய்யும் திறனுடையது மேலும் விஷவாயு இருக்கிறதா என கண்டறியவும் உதவுகின்றது என நிர்வாகத்தினர் கூறியுள்ளனர்.