மதுரையில் நடந்த சோக சம்பவம்! ஆன்லைன் வகுப்பால் 18 வயது பெண்ணுக்கு வந்த எமன்!

Photo of author

By Kowsalya

மதுரையில் 18 வயதுடைய இளம்பெண் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாததால் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

இந்த சம்பவம் கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி நடைபெற்றது. ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாததால் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார். பெற்றோர்களுக்கு சிறிது சந்தேகம் ஏற்படவே உடனடியாக அந்த இளம்பெண்ணை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஒருவார சிகிச்சைக்குப் பிறகு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை மாலை அந்த இளம்பெண் இறந்துள்ளார்.

 

அந்த இளம்பெண் மதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் B.Com இரண்டாவது ஆண்டு படித்து வந்துள்ளார்.அந்த இளம்பெண் வாடிப்பட்டி அருகே உள்ள கள்வெளிபட்டி என்ற இடத்தில் வசித்து வந்துள்ளார்.அவர் ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்ட அந்த நாளிலேயே தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

 

மருத்துவமனையின் தகவலின்படி சிறிது சிறிதாக உடல் தேறி வந்த அந்தப் பெண்ணின் உடல்நிலை, ஒரு வாரத்திற்குப் பிறகு திடீரென்று உடல்நிலை குன்றி காணப்பட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் வியாழக்கிழமை அளித்த சிகிச்சை பலனின்றி போக வியாழக்கிழமை மாலை இறந்துள்ளார்.குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 174 இன் கீழ் இயற்கைக்கு மாறான மரணம் வழக்கு அலங்காநல்லூர் போலீசால் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

கடந்த ஆண்டு இதே போன்ற ஒரு வழக்கில், பத்தாம் வகுப்பு படிக்கும் ஒரு பெண் கேரளாவின் மலப்புரத்தில் ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள முடியாததை தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறிப்பிடத்தக்கது. தகவலின் படி அந்த பெண்ணின் வீட்டில் உள்ள தொலைக்காட்சி வேலை செய்யாததால் சோகமாக இருந்ததாகவும், மேலும் வீட்டில் உள்ள ஒரே மொபைல் சார்ஜர் செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. காரணம் எதுவாயினும் அதை எதிர்கொள்ளும் பக்குவத்தை பெற்றோர்கள் மாணவர்களுக்கு எடுத்துக் கூறவேண்டும். சிறிய பிரச்சனைகளுக்கு தற்கொலை தீர்வாகாது.