பச்சோந்தி போல நிறத்தை மாற்றும் சேலை!!! இது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் எல்லாம் இல்லப்பா ஒரிஜினல்!!! 

0
52
#image_title

பச்சோந்தி போல நிறத்தை மாற்றும் சேலை!!! இது கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் எல்லாம் இல்லப்பா ஒரிஜினல்!!!

தெலுங்கானா மாநிலத்தில் சேலை வியாபாரி ஒருவர் வண்ணங்கள் மாறும் சேலையை தயாரித்து சாதனை படைத்துள்ளார். இதன் விலை மட்டும் லட்சங்களில் என்று கூறுகின்றனர்.

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசித்து வரும் நல்ல விஜய் என்பவர் விதவிதமான சேலைகளை தயாரித்து வருகிறார். இவர் சேலையில் நறுமணம் வீசக் கூடிய வகையில் தயாரித்தார். சேலையில் நறுமணத்திற்காக பல மூலிகை பொருட்களை அவர் பயன்படுத்தினார்.

மேலும் ஊசியின் முனையில் நுழையும் வகையில் சேலை ஒன்றை நல்ல விஜய் அவர்கள் தயாரித்து சாதனை படைத்தார். மேலும் இது போலீஸ் பலவிதமான சேலைகளை உருவாக்கிய நல்ல விஜய் அவர்கள் தற்பொழுது பச்சோந்தி போன்று நிறம் மாறக்கூடிய சேலையை உருவாக்கியுள்ளார்.

அதாவது ஐதராபாத்தில் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் நிறம் மாறும் சேலையை தயாரித்து தருமாறு சேலை தயாரிப்பாளர் நல்ல விஜய் அவர்களை அணுகியுள்ளார். அந்த தொழிலதிபர் கேட்டது போலவே சேலை தயாரிப்பாளர் நல்ல விஜய் அவர்கள் சுமார் 2.80 லட்சம் மதிப்புள்ள நிறம் மாறும் சேலையை தயாரித்துள்ளார்.

சேலை தயாரிப்பாளர் நல்ல விஜய் அவர்கள் பச்சோந்தி போல நிறம் மாறும் சேலையை தயாரிக்க 30 கிராம் தங்கம், 500 கிராம் வெள்ளி இரண்டையும் பயன்படுத்தியுள்ளார். பகல் நேரத்திலும், இரவு நேரத்திலும், மின் வெளிச்சத்திற்கு தகுந்த படியும் இந்த புடவை மூன்று விதமான நிறங்களில் மாறும் என்று தெரிவித்துள்ளார்.

பச்சோந்தி போல நிறம் மாறக் கூடிய இந்த சேலையை தொழிலதிபர் 2.80 லட்சம் ரூபாய் கெடுத்து நல்ல விஜய் அவர்களிடமிருந்து வாங்கியுள்ளார். மேலும் நல்ல விஜய் தற்பொழுது 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான சேலையை நெசவு செய்து வருவதாக தெரிவித்தார்.