பரபரப்புக்கு மத்தியில் வெளியான லியோ படத்தின் இரண்டாவது பாடல்!! தளபதி ரசிகர்களுக்கு செம்ம தீனி போங்க!!

0
66
#image_title

பரபரப்புக்கு மத்தியில் வெளியான லியோ படத்தின் இரண்டாவது பாடல்!! தளபதி ரசிகர்களுக்கு செம்ம தீனி போங்க!!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள படம் “லியோ”.இந்த படம் விஜய்யின் திரைப்பயணத்தில் அவருக்கு 67வது படமாகும்.இவரின் நடிப்பில் வெளியான படங்களில் இதுவரை இல்லாத அளவிற்கு இந்த லியோ படத்திற்கு எதிர்பார்ப்பும்,மவுசும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்ட செல்கிறது.இந்த லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ள நிலையில் அவர்களுடன் அர்ஜுன்,பிரியா ஆனந்த்,மன்சூர் அலிகான்,சஞ்சய் தத்,கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து இருக்கிறது.செவன் ஸ்கீரின் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இயமைத்துள்ளார்.

ஏற்கனவே படத்தின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.அதை தொடர்ந்து ஜூன் 22 விஜய் பிறந்த நாளன்று “நான் ரெடி தான் வரவா” பாடலை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.அதன் பின்னர் வருகின்ற அக்டோபர் 19 அன்று இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சக்கட்டத்தில் இருந்த நிலையில் அவர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக லியோ படத்தின் நான் ரெடி பாடலில் இடம்பெற்றிருந்த சில சர்ச்சையான வரிகளை சென்சார் போர்டு நீக்கியது.இந்த அதிர்ச்சியில் இருந்தே மீளாத ரசிகர்களுக்கு லியோ படக்குழு புதிதாக ஒரு பேர் அதிர்ச்சியை கொடுத்தது.

அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த லியோ பட ஆடியோ வெளியீட்டு விழா செப்டம்பர் 30 அன்று நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அரசியல் சூழ்ச்சியால்
ஆடியோ லாஞ்ச்சை படக்குழு ரத்து செய்யும் நிலைக்கு சென்று விட்டது.

பொதுவாக விஜய் படங்களை வைத்து அரசியல் ரீதியாக குடைச்சல் கொடுப்பது.படம் வெளியாகாமல் இருக்க பல்வேறு இன்னல்களை கொடுப்பது என்று அரசியல் தலையீடு அதிகம் இருக்கும்.அந்த வகையில் தற்பொழுது லியோ ஆடியோ லாஞ்சு ரத்தாக ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் பிரஷர் தான் காரணம் என்று பலர் கருத்து கூறி வருகின்றனர்.அமைச்சர் உதய நிதிக்கு சொந்தமான ரெட் ஜெயண்ட் பட தயாரிப்பு நிறுவனத்தின் தலையீடு இருப்பதால் தான் விஜய்யின் லியோ படத்திற்கு பெரும் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது.அதேபோல் நடிகர் ரஜினிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக குட்டி ஸ்டோரி ஒன்றை ரசிகர்களுக்காக தயார் செய்து வைத்திருந்த விஜய்க்கு இந்த நிகழ்வு சற்று அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது என்ற தகவலும் வெளியாகி இருக்கிறது.

இப்படி நடக்க காரணம் விஜய் விரைவில் அரசியலில் கால் பதிக்க இருக்கிறார் என்ற செய்தி பரவலாக பேசப்பட்டு வருகிறது.அதுமட்டும் இல்லாமல் மேலும் சில உள்நோக்க காரணங்களுக்காக விஜய்யை பலி தீர்க்க தான் லியோ ஆடியோ வெளியீட்டு விழாவை திமுக ரத்து செய்ய வைத்துள்ளது என்ற செய்தி காட்டு தீ போல் வேகமாக பரவி வருகிறது.

இதனால் விஜய்க்கு ஆதரவாகவும்,திமுகவுக்கு எதிராகவும் ஹேஸ்டேக்குகளை டிரெண்ட்டாக்கி தங்களது கடும் கண்டனத்தை விஜய் ரசிகர்கள் வெளிப்படுத்தினர்.

மேலும் லியோ ஆடியோ லாஞ்ச் ரத்தானது விஜய் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.இந்நிலையில் அவர்களை சற்று பூஸ்டப் செய்யும் விதமாக லியோ படத்தின் இரண்டாவது பாடலை படக்குழு இன்று வெளியிட்டு இருக்கிறது.அதன்படி`BADASS’ அன்று ஆரமிக்கும் மற்றொரு பாடலின் புரோமோவை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.இதனை தொடர்ந்து ரசிகர்கள் இந்த `BADASS’ படத்தின் பாடலை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.