GOLD PRICE: ஒரு சவரன் தங்கம் இன்று ரூ.59,600க்கு விற்பனையாகி வருகிறது.
2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்றத்துடன் காணப்பட்டது. தை மாத தொடக்கம் மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தங்கம் வெள்ளி போன்ற ஆபரணங்களை வாங்குவதில் மக்கள் ஆர்வம் காட்டத் தொடங்கினார்கள். எனவே, பொங்கல் விழா விடுமுறை நாட்களில் மட்டும் தங்கம் விலை ரூ.1,160 உயர்ந்து உள்ளது.
கடந்த செவ்வாய் கிழமை ஒரு சவரன் தங்கம் ரூ.58,720-க்கு விற்பனையானது அதன் பிறகு புதன்கிழமை தங்கம் விலை சற்று குறைந்தது அதாவது ஒரு சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.58,720-க்கு விற்பனையானது. இந்த நிலையில் நேற்று அதிரடியாக விலை ஏறியது. ஒரு சவரனுக்கு ரூ.400 அதிகரித்து இருந்தது.எனவே, ஒரு சவரன் தங்கம் ரூ.59,120க்கு விற்பனையானது.
ஜனவரி-17 இன்று, மீண்டும் அதிரடியாக தங்கம் விலை உயர்ந்துள்ளது. ரூ சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ..59,600-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.7,450க்கு விற்பனையாகி வருகிறது. இவ்வாறுவர் தங்கம் விலை ஏறினால் சில நாட்களிலேயே ஒரு சவரன் தங்கம் 60 ஆயிரத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தங்கம் விலை ஏற்றத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.103 க்கு விற்பனையான நிலையில் இன்று வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.1 உயர்ந்து உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.104 க்கு, ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து நான்காயிரமாக விற்பனையாகி வருகிறது.