அடுத்தடுத்து ஏற்படும் தொடர் நிலநடுக்கங்கள்!! பீதியில் உறையும் உலக மக்கள்!! 

Photo of author

By Amutha

அடுத்தடுத்து ஏற்படும் தொடர் நிலநடுக்கங்கள்!! பீதியில் உறையும் உலக மக்கள்!! 

இன்று காலை அர்ஜென்டினாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.6 என்ற அளவில் அளவுகோலில் பதிவாகி உள்ளது.

தென் அமெரிக்க கண்டத்தில் உள்ள நாடான அர்ஜென்டினாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.6 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதனால் மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வீதியில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கம் அர்ஜென்டினாவின் அண்டை நாடான சிலியிலும் உணரப் பட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து இதுவரை எதுவும் முறையான தகவல் அந்த நாட்டில் இருந்து வரவில்லை. இந்த நிலநடுக்கம் பூமியின் மையத்தில் சுமார் 171 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் மையம் தகவல் தெரிவித்தது. ஆனால் மற்ற விவரங்கள் இதுவரை எதுவும் வெளியிடப்படவில்லை.

ஏற்கனவே துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 50000 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். மேலும் ஏராளமான மக்கள் காயமடைந்தனர். துருக்கி சிரியா எல்லை பகுதி முற்றிலும் இந்த நிலநடுக்கத்தால் சேதம் அடைந்தது. அதைதொடர்ந்து புவி தட்டு நகர்வால் பல நாடுகளில் நிலநடுக்கம் ஏற்படும் என ஏற்கனவே புவியியல் வல்லுனர்கள் எச்சரிக்கை விடுத்து இருந்தனர்.

இதன் காரணமாக ஏற்கனவே நேற்று அமெரிக்காவின் வடக்கே உள்ள மாகாணமான அலாஸ்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதோடு மட்டுமில்லாமல் சுனாமி எச்ச்ச்ரிக்கையும் விடுக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.