அச்சுறுத்தும் அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கம்  தற்போது ஆப்கானிஸ்தானில்! பீதியில் உறைந்த மக்கள்! 

0
304
#image_title

அச்சுறுத்தும் அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கம்  தற்போது ஆப்கானிஸ்தானில்! பீதியில்  உறைந்த மக்கள்! 

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்பில் இருந்து இன்னும் முழுமையாக மீண்டு வராத நிலையில் தற்போது அடுத்தடுத்து இந்தோனேசியா ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது.

துருக்கி மற்றும் சிரியா எல்லைப் பகுதியில் உள்ள காசியான்டெப் மாகாணத்தில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது 7.8 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன இதில் சிக்கி 21,000 மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர். இதன் பாதிப்புகளே இன்னும் முழுமையாக தெரிய வராத நிலையில் அடுத்து இந்தோனேசியா நாட்டிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு கடலில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் தாக்கி கடல் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்று இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரெழுந்துள்ளனர்.

அடுத்த கட்ட அதிர்ச்சியாக தற்போது ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டின் ஃபாசியாபத் அருகே காலை 10.10 மணிக்கு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகியுள்ளது.  

இந்த நிலநடுக்கமானது பாசியாபாத்தில் இருந்து 265 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டிருப்பதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள் இழப்பு, உயிர் இழப்பு குறித்த விபரங்கள் எதுவும் வெளிவரவில்லை.

துருக்கி இந்தோனேசியாவை தொடர்ந்து ஆப்கானிஸ்தானிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதால் அந்த நாட்டு மக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Previous articleபி எம் கிசான் திட்டத்தின் மூலம் பயன்பெறுபவர்களா? இன்றே இறுதி நாள் முந்துங்கள்  இல்லையெனில் பணம் கிடையாது?
Next articleஉயிரை கூட பொருட்படுத்தாத மாணவிகள்! அரசு பேருந்தில் இப்படியா இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ!