காவல் நிலையம் அருகே துண்டிக்கப்பட்ட மனித தலை!! அதிர்ச்சியில் மக்கள்!!

Photo of author

By Jeevitha

Crime: மதுரை காவல் நிலையம் அருகே ஒருவரின் தலை மட்டும் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் உள்ள திருப்பாலை காவல் நிலையம் அருகே ஒரு 60 வயதுடைய ஆண் ஒருவரின் தலை ரோட்டில் கிடந்ததை பார்த்து அந்த பகுதி மக்கள் பெரும் பயத்தில் உள்ளார்கள். இந்த கொலையை யார் செய்து இருப்பார்கள் என பல கேள்விகள் மக்கள் மனதில் ஓடிக் கொண்டுள்ளது. மேலும் தலை மட்டும் தான் உள்ளது, உடல் எங்கே என பரபரப்பு ஏற்பட்டது.

இந்த மோசமான காலகட்டத்தில் யாரை நம்புவது என்று தெரியவில்லை என மக்கள் புலம்பி கொண்டிருக்கிறார்கள். இதனை தொடர்ந்து மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அந்த துண்டிக்கப்பட்ட மனித தலையை மீட்டு விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் தலையை கூர்மையான ஆயுதத்தால் வெட்டி உள்ளார்கள் என தெரிய வந்துள்ளது.

மேலும் காவல்துறை அந்த மனித தலையின் உடல் எங்கே என மோப்ப நாய் மூலம் தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தை காலை 7 மணி அளவில் மக்கள் பார்த்து காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். மேலும் காவல் துறை கொலை செய்யப்பட்ட நபர் மற்றும் யார் கொலையாளி என இன்னும் கண்டுபிடிக்கவில்லை விரைவில் இந்த கொலைக்கான காரணம் என்ன என்று விசாரணையில் தெரிய வரும் என கூறியுள்ளார்கள்.