மீண்டும் ஒரு பாலியல் புகார்! திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் கைது!

0
188
A sexual complaint again! Trichy Bishop Heber College professor arrested
A sexual complaint again! Trichy Bishop Heber College professor arrested

மீண்டும் ஒரு பாலியல் புகார்! திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் கைது!

பிள்ளைகள் படிக்கும் கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் தொடர்ந்து பாலியல் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. முதலில் ஆரம்பித்த பிஎஸ்பிவி பள்ளியில் ஆரம்பித்து சுசில் ஹரி பள்ளிவரை, பெரிய பள்ளிகளிளும் சரி, சிறு பள்ளிகளிலும் சரி இதே குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருந்து வருகின்றது.

தற்போதெல்லாம் செய்தித்தாள்களில் ஒரு செய்தியாவது இதைப்போல் வந்துவிடுகிறது. பெரிய பள்ளிகளுக்கு போனால் நன்றாக படிப்பார்கள், நான்கு பேருடன் சகஜமாகப் பழகுவார்கள் என்றுதான் எவ்வளவு பணம் செலவு செய்தாலும், நல்ல கல்லூரி, நல்ல பள்ளி என்று பார்த்து பார்த்து பெற்றோர்கள் சேர்த்து விடுகிறார்கள். ஆனால் வேலியே பயிரை மேய்ந்த கதையாக எங்கு சென்றாலும் இதே புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.

அரசு இதை எப்படி எதிர்கொள்ளும் எவ்வாறு கட்டுப்படுத்தும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் தனிமனித ஒழுக்கம் என்பது அவசியம் தேவை. அப்படி இருக்கும் பட்சத்தில் இந்த மாதிரி புகார்கள் ஏதும் வராமல் பிள்ளைகள் பாதுகாப்பாக இருப்பார்கள். தற்போது திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி பேராசிரியர் பால் சந்திரமோகன் மீது பாலியல் வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அவர் மீது எழுந்த புகாரை அடுத்து ஸ்ரீரங்கம் மகளிர் போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது. மாவட்ட சமூக நல அலுவலர் புகாரின் பேரில் பால் சந்திரமோகன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் இதுபற்றி தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.

Previous articleகாதல் திருமணம் செய்த கவுன்சிலர் மகள்! போலீசில் தஞ்சம்!
Next articleபிக்பாஸ் பிரபலத்துக்கு ஆபாச மெசேஜ்! தமிழக போலீசின் அதிரடி!