ஜீன்ஸ் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! இதை வைத்து ஊறுகாய் தான் போடமுடியும் புலம்பும் வாடிக்கையாளர்!

0
182
A shock awaits the person who ordered the jeans! The customer complains that he can only put pickles with this!
A shock awaits the person who ordered the jeans! The customer complains that he can only put pickles with this!

ஜீன்ஸ் ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி! இதை வைத்து ஊறுகாய் தான் போடமுடியும் புலம்பும் வாடிக்கையாளர்!

தற்போது உள்ள காலகட்டத்தில் எந்த ஒரு பொருள் வேண்டுமானாலும் அவரவர்கள் ஆன்லைனில் தான் ஆடர் செய்து பெறுகின்றனர்.அதற்காக பல்வேறு செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த செயலிகளுக்கு சென்று நாம் விரும்பும் பொருட்களை கிளிக் செய்து முகவரி போன்றவைகளை பதிவு செய்தால் குறிப்பிட்ட நாட்களுக்குள் வீடு தேடி வந்துவிடும்.

அவ்வாறு இங்கிலாந்தின் டெபாப் என்ற பயன்படுத்திய பொருட்களை விற்பனை செய்யும் தளமாக செகண்ட் ஹேண்ட் பேஷன் என்பதில் ஒரு இளம் பெண் ஜீன்ஸ் பேண்ட் ஆர்டர் செய்துள்ளார்.ஆனால் அந்த பெண்ணிற்கு பை நிறைய வெங்காயம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.அதனை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் இந்த சம்பவம் குறித்து சப்ளையர்களிடம் கேட்டபோது இது எப்படி நடந்தது என தெரியவில்லை என பதில் கூறியுள்ளனர்.அதனையடுத்து இது தொடர்பாக சமூக ஊடங்களில் விவாதிக்கப்பட்ட பின்னர்.இதுபோன்ற அனுபவத்தை சந்தித்த பலரும் தங்களுக்கும் இவ்வாறு நடந்துள்ளது என கருத்துகளை பகிர்ந்து கொண்ண்டனர்.ஒருசிலர் மறுபுறம் இனிமேல் ஆர்டர் செய்தால் வெங்காயம் தான் கிடைக்குமா என கேலியான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

Previous articleமாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு பாகுபாடு காட்டுவது நியாயமா? – ஊதிய உயர்வை வலியுறுத்தி  தமிழக அரசிடம் பாமக தலைவர் கோரிக்கை!
Next articleமீண்டும் நடைமுறைக்கு வரும் பழைய ஓய்வூதிய திட்டம்! பஞ்சாப்பை அடுத்து தற்போது தமிழகத்திலும்?