அரசு அலுவலக வாசலில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம்!! அமர்ந்திருந்த மேற்பார்வையாளருக்கு நேர்ந்த கொடூரம்!!

Photo of author

By Preethi

அரசு அலுவலக வாசலில் நடைபெற்ற அதிர்ச்சி சம்பவம்!! அமர்ந்திருந்த மேற்பார்வையாளருக்கு நேர்ந்த கொடூரம்!!

சென்ட்ரிங் காண்ட்ராக்டர் முருகன் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகிலுள்ள விஸ்வநாதபுரத்தில் தனது மனைவி தமிழ்ச்செல்வியுடன் வசித்து வந்தார். அவர் மனைவி திமுகவில் செயற்குழு உறுப்பினராக உள்ளார். ஏற்கனவே முருகனின் மனைவி தென்காசி மாவட்டம் ஒன்றிய குழு தலைவராக இருந்ததுள்ளார்.

செங்கோட்டை நகராட்சி அலுவலகத்தில் மத்திய அரசின் சுகாதாரத் தூய்மை பணிகள் திட்டத்தின் மேற்பார்வைளராக தற்காலிக பணியை முருகனின் மூத்த மகன் ராஜேஷ் செய்து வந்தார். இந்நிலையில், ராஜேஷ் அலுவலகத்திற்கு வெளியே  அமர்ந்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த இரண்டு நபர்கள் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றுவிட்டார்கள் . ராஜேஷ் ரத்த வெள்ளத்தில் சரிந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து  சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்ற காவலர்கள் ராஜேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருந்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் ராஜேஷின்  உறவினர்கள் மற்றும் அவர் குடும்பத்தினர்கள் நகராட்சி அலுவலத்தின் முன்பு சாலை மறியல் போராட்டத்தில்  ஈடுப்பட்டார்கள்.

இப்போராட்டத்தில் ஈடுப்பட்டவர்களிடம் காவல்துறை கண்காணிப்பாளர்  பேச்சுவார்த்தை நடத்தி சமாதானபடுத்தி அனுப்பி வைத்தார் . இந்த கொலை சம்பவத்தை வழக்கு பதிவு செய்து மூர்த்தி (22), மாரி (19) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணையை மேற்கொண்டு வருகின்றார்கள். இதன் முதல் கட்ட விசாரணையில் முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்தது  தெரியவந்துள்ளது.