கள்ளக்குறிச்சி பள்ளியில் 17 ஆண்டுகளுக்கு முன்பே இது போன்ற சம்பவம்! முத்தரசன் வெளியிட்ட தகவல் 

0
158
A similar incident happened in Kallakurichi school 17 years ago! Information released by Mutharasan
A similar incident happened in Kallakurichi school 17 years ago! Information released by Mutharasan

கள்ளக்குறிச்சி பள்ளியில் 17 ஆண்டுகளுக்கு முன்பே இது போன்ற சம்பவம்! முத்தரசன் வெளியிட்ட தகவல்

கள்ளக்குறிச்சி சக்தி பள்ளியில் 17 ஆண்டுகளுக்கு முன்பே இத்தகைய சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே ஆதிச்சபுரம் கிராமத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 24 வது மாவட்ட மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்ற வந்த அக்கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சக்தி பள்ளியில் நடந்திருக்கும் இச்செயல் புதிது அல்ல. 17 ஆண்டுகளுக்கு முன்னர் கடந்த 2005 ஆம் ஆண்டு அப்பள்ளியில் இத்தகைய சம்பவங்கள் நடைபெற்றது. இது தொடர்பாக எத்தனை மாணவர்கள் இறந்துள்ளனர் என்பது குறித்து அப்போதே பட்டியலும் வெளியிடப்பட்டது. அப்போதே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டதாக முத்தரசன் தெரிவித்தார்.

இந்தப் பள்ளிக்கூடம் முழுக்க முழுக்க பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த வகுப்புவா சக்திகள் நடத்தும் பள்ளிக்கூடம் இந்துத்துவா கொள்கைகளை புகுத்துவதற்காகவும் இப்பள்ளி நடத்தப்படுவதாக முத்தரசன் குற்றம் சாட்டினார். இந்துத்துவா சக்திகளின் செல்வாக்கை பெற்றிருந்ததால் 2005 ஆம் ஆண்டு முதல் ஸ்ரீமதி இறக்கும் நாள் வரை மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளது.

இந்துத்துவா சக்தியை கண்டு அஞ்சு நடுங்கியதால் மாவட்ட நிர்வாகம் எதையோ பெற்றுக் கொண்டு கண்டும் காணாமல் இருந்துள்ளது. இதனாலேயே தற்போது நாம் ஸ்ரீ மதியை இழந்துள்ளோம். தஞ்சையில் உள்ள சாஸ்திரா பல்கலைக்கழகம் இந்துத்துவா கொள்கைகளை பின்பற்றும் ஓர் கல்வி நிறுவனம் ஆகும. தமிழக அரசுக்கு சொந்தமான திறந்தவெளி சிறைச்சாலை அமைய இருந்த இடத்தில் சட்டத்திற்கு புறம்பாக சாஸ்திர பல்கலைக்கழக கட்டிடங்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது.

புறம்போக்கு நிலங்களில் சிறு குடிசைகள் இருந்தால் அவற்றை அரசு அதிகாரிகள் உடனடியாக அப்புறப்படுத்துகின்றனர். ஆனால் தமிழக அரசுக்கு சொந்தமான நிலத்தில் திறந்தவெளி சிறைச்சாலை அமைய வேண்டிய இடத்தில் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டுள்ள சாஸ்திரா பல்கலைக்கழகத்தை அப்புறப்படுத்த அரசு அதிகாரிகள் அஞ்சுகின்றனர்.

இந்து துவா சக்திகள் ஆதிக்கம் செலுத்துவதால் மாவட்ட நிர்வாகம் அச்சப்படுகிறது. மத்தியில் ஆட்சியில் இருக்கிறோம் என்ற அகம்பாவத்தில் விருப்பம் போல் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மாநில அரசு மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என அவர்  தெரிவித்தார்.

Previous articleமூன்றாவது முறையாக இணையும் விஷ்ணு விஷால் – ராம்குமார் கூட்டணி.. ராட்சசன் 2 வை தயாரிக்கும் பிரபல நிறுவனம்!
Next articleவிவசாயத்திற்காக மண் அள்ள அனுமதி பெற்று மணல் திருட்டு – நாம் தமிழர் கட்சியினர் முறையீடு