சனிக்கிழமையில் மட்டும் இளைஞரை தேடி வந்து கடிக்கும் பாம்பு!! ஒரே நாளில் குணமாகும் அதிசயம்!! பாம்பு பழி வாங்குமா?

Photo of author

By Divya

சனிக்கிழமையில் மட்டும் இளைஞரை தேடி வந்து கடிக்கும் பாம்பு!! ஒரே நாளில் குணமாகும் அதிசயம்!! பாம்பு பழி வாங்குமா?

நம் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் பாம்பு கடிக்கும் மட்டும் சுமார் 50,000 இறப்புகள் ஏற்படுகிறது என்று ஆய்வு தகவல்கள் கூறுகிறது.உலகை ஒப்பிடுகையில் இந்தியாவில் பாம்பு கடியால் ஏற்படும் பாதியாக உள்ளது.

இந்தியாவில் பல வகை பாம்பு இனங்கள் உள்ளது.இதில் கிங் கோப்ரா என்று அழைக்கப்படும் ராஜ நாகத்தில் தான் அதிக விஷம் உள்ளது.இந்த பாம்பு கடித்தால் உயிர்பிழைப்பது என்பது அரிதிலும் அரிதாகும்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் 24 வயது நிரம்பிய விகாஸ் துபே என்ற இளைஞரை ஒரே பாம்பு ஏழு முறை கடித்துள்ள நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.ஜூன் 2 ஆம் தேதி பாம்பு கடிக்கு ஆளான விகாஸ் துபே கிட்டத்தட்ட 40 நாட்களில் 7 முறை அதுவும் சனிக்கிழமை நாளில் மட்டுமே பாம்பு கடித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு குணமடைந்திருக்கிறார்.

இந்த சம்பவம் திரைப்படங்களில் பாம்புகள் பழி வாங்கும் நிகழ்வை தான் நினைவூட்டுகிறது.இந்நிலையில் பாம்புகளால் எதையும் நினைவில் கொள்ள முடியாது.பாம்பின் மூளைக்கு அத்தகைய திறன் இல்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.நாய்,பூனை போன்ற இதர விலங்குகள் போல் பாம்புகளால் எதையும் நினைவில் கொள்ள முடியாது என்பது விஞ்ஞானிகளின் கருத்தாக இருக்கிறது.

பாம்புகள் வாசனை வைத்து தனக்கான உணவு மற்றும் அச்சுறுத்தல்களை அறிந்து கொள்கின்றன.பாம்புகளால் புற ஊதா ஒளி மூலம் குறைந்த வெளிச்சத்தில் மட்டுமே பார்க்க முடியும்.பாம்புகள் தங்களது நாக்கை நீட்டி வாசனையை அறிந்து கொள்ளும் திறன் பெற்றிருக்கிறது.அருகில் இருப்பவற்றை வாசனை பிடித்து நகரும் திறன் கொண்டது.அப்படி இருக்கையில் திரைப்படங்களில் வருவது போன்று பாம்பு ஒருவரை பழிவாங்கும் என்று சொல்வது சாத்தியமில்லா ஒன்று என வனவிலங்கு நிபுணர் மிருதுல் தெரிவித்திருக்கிறார்.