400 டியூன்கள் அமைக்கப்பட்ட ஒரு பாடல்!! வேதனையை அனுபவித்த எம் எஸ் வி மற்றும் கண்ணதாசன்!!

Photo of author

By Gayathri

கண்ணதாசன் மற்றும் எம் எஸ் விஸ்வநாதன் அவர்கள் பல படங்களில் இணைந்து பல பாடல்களை வெற்றி பாடல்களாக தந்துள்ளனர் என்பது அனைவரும் அறிந்ததே.

அந்த வகையில், இயக்குனர் ஸ்ரீதர் அவர்களோ தன்னுடைய படத்திற்கு ஹிட்டான ஒரு பாடல் வேண்டும் என கேட்க, எம் எஸ் வி மற்றும் கண்ணதாசன் அவர்கள் இணைந்து பாடல் மற்றும் அதற்கான டியூன்களை அமைத்துள்ளனர். எனினும் அது இயக்குனர் ஸ்ரீதர் அவர்களுக்கு பிடிக்காமல் போய்விட்டது.

இருவரும் இரண்டு மாதங்களாக 300 முதல் 400 வரையிலான டியூன்களை அமைத்துள்ளனர். கண்ணதாசன் அவர்களுக்கு டியூன் பிடித்திருந்தால் எம் எஸ் வி அவர்களுக்கு பிடிக்கவில்லை. எம் எஸ் வி அவர்களுக்கு பிடித்திருந்தால் கண்ணதாசன் அவர்களுக்கு பிடிக்கவில்லை. ஒருவேளை இவர்கள் இருவருக்கும் பிடித்திருந்தால் அது இயக்குனர் ஸ்ரீதர் அவர்களுக்கு பிடிக்கவில்லை என தலையை முட்டிக் கொள்ளும் அளவிற்கு கடினப்பட்டு இவர்கள் இருவரும் இணைந்து கடைசியாக ஒரு டியூனை முடிவு செய்ய இயக்குனர் ஸ்ரீதர் அவர்களும் சம்மதித்து விட்டாராம்.

1963-ம் ஆண்டு நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தை இயக்கியிருந்தார். கல்யாண் குமார், தேவிகா இணைந்து நடித்த இந்த படத்திற்கு எம்.எஸ்.வி ராமமூர்த்தி இணைந்து இசையமைக்க, கவியரசர் கண்ணதாசன் அனைத்து பாடல்களையும் எழுதியுள்ளார். இந்த படத்தில் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இப்படி உருவாக்கப்பட்ட பாடல் தான், ” நெஞ்சம் மறப்பதில்லை “. இதனைக் குறித்து இயக்குனர் ஸ்ரீதர் அவர்கள் கண்ணதாசன் மற்றும் எம்.எஸ் இடம் கூறியதாவது :-

இந்த படத்தின் பாடல்கள் கம்போசிங்கின்போது, நான் நெஞ்சம் மறப்பதில்லை என்று டைட்டில் வைத்திருக்கிறேன். இதில் வரும் ஒரு பாடல் காலத்திற்கும் மறக்காத வகையில் இருக்க வேண்டும் என்று இயக்குனர் ஸ்ரீதர் கூறியுள்ளார். இதை மனதில் வைத்துக்கொண்ட கண்ணதாசன் எம்.எஸ்.வி இருவரும் பாடலுக்கான கம்போசிங்கை தொடங்கியுள்ளனர்.எம்.எஸ்.வி கண்ணதாசன் இருவரும் 2 மாதங்கள் ஓய்வில்லாமல் டியூன் அமைத்து பாடலை உருவாக்கியுள்ளனர்.