சுபாஷ் கெய் தயாரிப்பில் 1993 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ” கள்நாயக் “. இந்த திரைப்படம் அந்த ஆண்டின் இரண்டாவது அதிக வசூல் செய்த படமாக சாதனை படைத்தது. மேலும் திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றியையும் கண்டது.
ஆனால் இப்படத்தில் வரக்கூடிய ஒரு பாடல் அக்கால கட்டத்தில் மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியது. மேலும் அந்த பாடலின் ஆரம்ப வரிகள் இரட்டை அர்த்தங்கள் ஆக மற்றும் நேரடியான ஆபாச வார்த்தைகளாக இருந்தது என மக்கள் கொந்தளித்தனர். பொதுமக்கள் ரசிகர்கள் மட்டுமின்றி 32 அமைப்புகள் இந்த பாடலுக்கு கண்டனம் தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி பல சர்ச்சைகளையும் கண்டனங்களையும் சுமந்தாலும் கூட வெற்றி கண்ட பாடலாக திகழ்ந்தது தான் ” சோலி கீ பீச்சே ” என்ற பாடல். சஞ்சய் தத் மாதுரி தீட்சித் நடனத்தில் வெளியான இந்த பாடலுக்கு சரோஜ் கான் நடன ஆசிரியராக பணியாற்றியுள்ளார். மேலும் இந்த பாடலை அல்கா யாக்னிக் மற்றும் இலா அருண் இணைந்து பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்காலத்தில் இந்த பாடல் ஆனது ரசிகர்களிடையே எந்த அளவிற்கு கோபத்தை தூண்டியதோ அதே அளவிற்கு வரவேற்பையும் பெற்று சூப்பர் ஹிட் பாடல் ஆக மாறியது. இப்பாடல் வெளியாகி ஒரு வாரத்திற்குள் ஒரு கோடி கேசட் விற்பனையாகி சாதனை செய்துள்ளது.
குறிப்பாக, இந்த பாடல் விமர்சனங்களோடு மட்டும் நிற்காமல் அக்காலத்தில் நாடாளுமன்றத்திலும் விவாத பொருளாக மாறியது என்ற தகவல்களும் வெளியாகி உள்ளன. மேலும் இந்த பாடலால்தான் மாதுரி தீக்ஷித்தை பிரபலமாகியுள்ளார். இவர் இந்த பாடலால் ஒரே இரவில் பிரபலமாகியுள்ளார் என்பது பெருமைக்குரிய விஷயமாகவே பார்க்கப்பட்டது.