ஒரு ஸ்பூன் டூத் பேஸ்ட் போதும்.. சரும மருக்கள் இலைபோல் காய்ந்து உதிர்ந்துவிடும்!!

0
144

நமது உடலில் எந்த பகுதியிலும் மருக்கள் உருவாகலாம்.அவை வந்து விட்டால் நம் அழகே பாழாகிவிடும்.மருக்கள் ஒரு இடத்தில் வந்தால் அவை மற்ற இடங்களுக்கு பரவிவிடும்.இவ்வாறு உருவான மருக்களை தடையமின்றி நீக்க கீழ்கண்ட வீட்டு வைத்தியத்தை முயற்சி செய்யவும்.

தீர்வு 01:-

1)டூத் பேஸ்ட் – ஒரு ஸ்பூன்
2)சின்ன வெங்காயம் – நான்கு
3)வெள்ளைப் பூண்டு – நான்கு

முதலில் நான்கு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி கொள்ளவும்.அடுத்து வெள்ளைப்பூண்டு பற்களை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

இவை இரண்டையம் உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ளவும்.பிறகு ஒரு ஸ்பூன் டூத் பேஸ்டை இந்த வெங்காய பூண்டு சாறில் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்யவும்.

பிறகு இதை மருக்கள் மீது தடவி நன்றாக காயவிடவும்.இந்த பேஸ்டை ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை மருக்கள் மீது அப்ளை செய்து வந்தால் அவை காய்ந்து வேரோடு உதிர்ந்துவிடும்.

தீர்வு 02:-

1)அம்மான் பச்சரிசி பால் – சிறிதளவு
2)காபித் தூள் – சிட்டிகை அளவு

முதலில் அம்மான் பச்சரிசி இலையில் இருந்து பால் சேகரித்துக் கொள்ள வேண்டும்.அடுத்து அதில் சிட்டிகை அளவு காபித் தூள் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.பிறகு இதை மருக்கள் மீது பூசினால் ஓரிரு தினங்களில் அவை தானாக உதிர்ந்துவிடும்.

தீர்வு 03:-

1)ஆப்பிள் சீடர் வினிகர் – ஒரு ஸ்பூன்
2)காட்டன் பஞ்சு – சிறிதளவு

கிண்ணத்தில் வெது வெதுப்பான தண்ணீர் ஊற்றி ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

பிறகு அதில் காட்டன் பஞ்சை நினைத்து மருக்கள் மீது பூசினால் அவை சீக்கிரம் உதிர்ந்துவிடும்.

தீர்வு 04:-

1)எலுமிச்சை சாறு – ஒரு ஸ்பூன்
2)துளசி சாறு – ஒரு ஸ்பூன்

நன்கு பழுத்த எலுமிச்சம் பழத்தை நறுக்கி அதில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாற்றை ஒரு கிண்ணத்திற்கு பிழிந்து கொள்ளவும்.

பிறகு 10 முதல் 15 துளசி இலைகளை மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து சாறு எடுத்து எலுமிச்சை சாறில் மிக்ஸ் செய்து மருக்கள் மீது பூசினால் அவை சீக்கிரம் மறைந்துவிடும்.

Previous articleதோலில் காணப்படும் வெண்புள்ளிகள் மறைய.. இந்த ஆயுர்வேத வைத்தியத்தை ட்ரை பண்ணுங்க!!
Next articleஅசுர வேகத்தில் தலைமுடி வளர.. ஆனியன் ஹேர் ஆயில் செய்து பயன்படுத்துங்கள்!!