ஒரு கல் இருந்தால் போதும்!! ஹேர் டை வாங்க வேண்டிய அவசியம் இல்லை!! 

0
528

ஒரு கல் இருந்தால் போதும்!! ஹேர் டை வாங்க வேண்டிய அவசியம் இல்லை!!

நரை முடியை நிரந்தரமாக கருப்பாக மாற்றவும்,  விழுந்த தலையில் அதாவது முடி உதிர்ந்த இடத்தில் மீண்டும் முடியை வளர செய்யவும் உதவும் அருமையான ஒரு பொருளை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். அந்த பொருளின் பெயர் அஞ்சனக்கல். இந்த கல்லை பயன்படுத்தி நரை முடியை முழுவதுமாகவும், நிரந்தரமாகவும் கருப்பாக மாற்ற முடியும். முடி உதிர்ந்த இடத்தில் முடியை வளர செய்யலாம். இந்த கல்லை கண் மையாக பயன்படுத்தலாம். கண் மையாக பயன்படுத்தும் பொழுது கண் பார்வை தெளிவாக தெரியும். இந்த கல்லால் தயாரிக்கப்பட்ட கண் மையை குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் நெற்றியில் வைக்கும் பொட்டாக பயன்படுத்தலாம். இதனால் மனிதனின் ஆறாவது அறிவு நன்கு தூண்டப்படும்.

இதனால் மூளை வளர்ச்சி அதிகரிப்பதோடு நியாபக திறன் அதிகரிக்கும். மூளை நன்கு சுறுசுறுப்பாக வேலை செய்யும். கண் புருவத்தில் முடி இல்லாதவர்கள் அந்த இடத்தில் இதை தடவினால் கண் புருவ முடிகள் நன்கு அடர்த்தியாக வளரும். இந்த கல்லை ஹேர் டையாக தலைக்கு பயன்படுத்தும் பொழுது கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும். இந்த கல்லை எவ்வாறு பயன்படுத்துவது என்று தெரிந்து கொள்ளலாம்.

செய்முறை

ஈரம் இல்லாத உரலில் எடுத்து வைத்துள்ள அஞ்சனக் கற்களை போட்டு பொடி செய்து கொள்ளவும். நன்கு பொடியாக இடித்து அதை சலித்து ஒரு கண்ணாடி பாட்டிலில் அல்லது காற்று புகாத பாட்டிலில் போட்டு வைத்துக் கொள்ளவும். தேவைப்படும் பொழுது இந்த பொடியை எடுத்து பயன்படுத்திக் கொள்ளலாம்.

அஞ்சனக் கற்களை கொண்டு தயாரித்து வைத்துள்ள பொடியை இரண்டு விதமாக பயன்படுத்தலாம்.

டிப்ஸ் 1

அஞ்சனக் கற்களை இடித்து பொடியாக செய்து மையாகவோ அல்லது ஹேர் டையாகவோ பயன்படுத்தலாம். அதை எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம்.

முதலில் ஒரு சிறிய பாத்திரம் ஒன்றை எடுத்துக் கொள்ளவும். அதில் ஒரு ஸ்பூன் அளவு இந்த அஞ்சனக் கல் பொடியை சேர்த்துக் கொள்ளவும். பிறகு இதில் அரை ஸ்பூன் அளவு விளக்கெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். பிறகு இதில் அரை ஸ்பூன் அளவு விளக்கெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். பிறகு நன்கு இதை கலக்கி எடுத்து கொண்டு பயன்படுத்தலாம்.

குழந்தைகளுக்கு கண்ணத்தில் வைக்கும் பொட்டாகவும், கண் மையாகவும் பயன்படுத்தலாம். சிறிது எண்ணெய் பயன்படுத்தி இந்த பொட்டை துடைத்தால் இது போய் விடும். இந்த பேஸ்டை குழந்தைகளுக்கு கண் மையாக பயன்படுத்தினால் குழந்தைகளுக்கு கண் பார்வை நன்றாக அதிகரிக்கும்.

இந்த பேஸ்டை பெரியவர்கள் நெற்றியில் வைக்கும் பொட்டாக பயன்படுத்தலாம்.அவ்வாறு பயன்படுத்துவதால் மனிதனின் ஆறாவது அறிவு தூண்டப்படும். மூளை சுறுசுறுப்பாக இருக்கும். கண் பார்வை திறனும் அதிகரிக்கும்.

வெள்ளை முடி அதிகமாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் இதை சிறிதளவு எடுத்து வெள்ளை முடி இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். இதனை தற்காலிகமாக பயன்படுத்துவதை விட தொடர்நது ஹேர் டையாக பயன்படுத்தி வந்தால் வெள்ளையாக இருக்கும் முடி கருமையாக மாறிவிடும்.

டிப்ஸ் 2

தலைமுடியை நிரந்தரமாக கருப்பாக மாற்ற எவ்வாறு இந்த அஞ்சன கல்லை பயன்படுத்துவது என்று பார்க்கலாம். முதலில் ஒரு சிறிய பாத்திரம் எடுத்துக் கொண்டு அதில் ஒரு ஸ்பூன் அளவு நெல்லிக்காய் பவுடர் சேர்த்துக் கொள்ளவும். பிறகு இதில் நாம் தயாரித்து வைத்துள்ள அஞ்சன கல் பொடியையும் சேய்த்து கொள்ளவும். இதில் சிறிதளவு விளக்கெண்ணெய் சேர்த்துக் கொள்ள வேண்டும். தேங்காய் எண்ணெய் ஆறு ஸ்பூன் சேர்த்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை நன்கு கலக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு இரண்டு நாட்கள் அப்படியே விட்டுவிட்டு இரண்டு நாட்கள் கழித்து இந்த எண்ணெயை பயன்படுத்த வேண்டும். பிறகு இந்த எண்ணெயை முடியின் வேர் கால்கள், முடி உதிர்ந்திருக்கு இடங்கள், வெள்ளை முடி இருக்கும் இடங்களில் இதை தடவ வேண்டும். பிறகு 30 நிமிடம் கழித்து ஒரு ஷேம்புயை வைத்து தலைக்கு குளிக்க வேண்டும். இது மாதிரியே வாரத்துக்கு 2 முறை செய்தால் ஒரு மாதத்தில் இதன் பலன்கள் உங்களுக்கே தெரியும்.

Previous articleதலை முதல் கால் வரை அனைத்து பிரச்சனையும் குணப்படுத்தும்  அதிசய மூலிகை!! சிறுநீரக கல் உடனடியாக கரைய வேண்டுமா இதனை பண்ணி பாருங்கள்!! 
Next articleEISC ஆணையத்தில் வேலைவாய்ப்பு!! முழு விவரங்களுடன் உடனே விண்ணப்பியுங்கள்!!