ஏழு மாத குழந்தையை கடித்து குதறிய தெரு நாய்! ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்!
தற்போது உள்ள காலகட்டத்தில் முறையாக குழந்தை பெற்று கொள்ளாதவர்கள் மற்றும் பெண் குழந்தைகளை விரும்பாதவர்கள் என அனைவரும் பச்சிளம் குழந்தை என்று கூட எண்ணாமல் தெரு,குப்பை மேடு போன்ற இடங்களில் வீசி செல்கின்றனர்.அந்த வகையில் உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நொய்டாவில் உள்ள நொய்டா வீட்டு வசதி வாரியத்தின் குடியிருப்பில் பகுதியில் தெருநாய்கள் சுற்றி திரிகின்றது.
அவ்வாறு சுற்றி திரியும் தெரு நாய் ஒன்று ஏழு மாத குழந்தையை கடித்து குதறியது.அந்த குழந்தைக்கு வயிற்றில் பலத்த காயம் ஏபட்டது. அதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு அந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இந்நிலையில் நேற்று அந்த குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.இந்த சம்பம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் பொதுமக்கள் கோபமடைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அதனையடுத்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு தங்களுடைய குழந்தைக்கும் இவ்வாறு போன்ற பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகக அச்சம் தெரிவித்து வருகின்றனர்.ஏழு மாத பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்தபகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.