ஓடும் ரயிலில் மாணவிக்கு பாலியல் தொந்தரவு! குற்றவாளியை அடித்து துரத்திய மாணவி!
மும்பையில் ஓடும் ரயிலில் கல்லூரி மாணவி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபருடன் அந்த மாணவி தைரியமாக சண்டை போட்டு விரட்டிய நிலையில் நான்கு மணி நேரத்தில் பாலியல் தொந்தரவு கொடுத்த நபரை போலிஸார் கைது செய்துள்ளனர்.
மஹாராஷ்டிரா மாநிலத்தின் மும்பை நகரில் மத்திய ரயில்வேயின் ஹார்பர் வழித்தடத்தில் பயணிக்கும் புறநகர் ரயில் நேற்று காலை 7.30 மணிக்கு சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திலிருந்து பன்வேல் நோக்கி புறப்பட்டது. இந்த ரயிலில் மும்பையின் கிர்காவ்ன் பகுதியை சேர்ந்த 20 வயதுள்ள கல்லூரி மாணவி நவி மும்பையில் உள்ள கல்லூரிக்கு செல்வதற்காக ரயிலில் இருக்கும் மகளிர் பெட்டியில் பயணித்தார். கல்லூரி மாணவரி பயணித்த அந்த பெட்டியில் அவரை தவிர வேரு எந்த பயணியும் இல்லை.
ரயில் நிலையத்திலிருந்து அந்த ரயில் புறப்பட்ட நேரத்தில் கல்லூரி மாணவி இருந்த மகளிர் பெட்டியில் ஒரு நபர் ஏறினார். தனியாக இருந்த கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். அந்த சமயத்தில் கல்லூரி மாணவி அந்த நபருடன் தைரியமாக சண்டையிட்டு அந்த நபரின் பிடியிலிருந்து தப்பிக்க போராடியுள்ளார்.
அதற்குள் ரயில் மஸ்ஜித் காவல் நிலைய நிறுத்தத்தில் நின்றதால் அந்த நபர ரயிலை விட்டு இறங்கி ஓட்டம் பிடித்தார். இதையடுத்து அடுத்த பெட்டிக்கு சென்ற கல்லூரி மாணவி அடுத்த பெட்டியில் இருந்தவர்களிடம் நடத்த சம்பவத்தை கூறினார்.
உடனே ரயில்வே காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் தனிப்படை அமைத்து காவல் துறையினர் நான்கு மணி நேரத்தில் அந்த நபரை கைது செய்தனர். இதையடுத்து கைது செய்யபட்ட நபரிடம் போலிஸார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் கைது செய்யபட்ட நபர் பீகாரின் கிஷன்கஞ்ச் என்ற இடத்தை சேர்ந்த 40 வயதான தொழிலாளி நவாஜூ கரீம் ஷேக் என்று தெரியவந்தது.