நீட் பயிற்சி மேற்கொண்டு வந்த மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை! நெய்வேலி அருகே பரபரப்பு

0
196
Young girl dies in Erode district! Police investigation!
Young girl dies in Erode district! Police investigation!

நீட் பயிற்சி மேற்கொண்டு வந்த மாணவி ரயில் முன் பாய்ந்து தற்கொலை! நெய்வேலி அருகே பரபரப்பு

கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷூப் வட்டம் 30 ல் வசித்து வருபவர் உத்திராபதி. என்எல்சி ஒப்பந்த தொழிலாளியாக இவர் பணிபுரிந்து வரும் நிலையில் இவரது மகள் நிஷா(18) கடந்த ஆண்டு நெய்வேலியில் உள்ள பள்ளியில் பிளஸ் டூ படித்து வந்தார். பிளஸ் டூவில் 399 மதிப்பெண்கள் எடுத்த நிலையில் கடந்த ஆண்டு நீட் தேர்வை எழுதினார் நிஷா.

நீட் தேர்வில் சரியான மதிப்பெண்கள் கிடைக்காததால் மருத்துவ படிப்பு சேர முடியவில்லை. இருந்தாலும் அவரது பெற்றோர்கள் நீட் தேர்வு பயிற்சிக்காக இந்த ஆண்டு நெய்வேலி அருகே இந்திரா நகரில் அமைந்துள்ள தனியார் பயிற்சி மையத்தில் சேர்த்து பயிற்சி அளித்து வந்தனர். இங்கு கடந்த ஓராண்டாக பயிற்சி மேற்கொண்டு வந்து நிஷா வரும் மே மாதம் ஏழாம் தேதி நீட் தேர்வு எழுதுவதற்கு தயாராகி வந்தார்.

இதற்காக அந்த பயிற்சி மையத்தில் தற்போது தேர்வுகள் வைக்கப்பட்டு வருகின்றன. அந்த தேர்வுகளை அவர் எழுதி வந்த நிலையில் அதில் சரியான மதிப்பெண்கள் பெறவில்லை என தெரிய வருகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான நிஷா இன்று வகுப்பு இல்லாத நிலையிலும் வகுப்பு உள்ளதாக கூறிவிட்டு நெய்வேலியில் இருந்து பேருந்து மூலம் வடலூருக்கு வந்தார்.

வடலூர் ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளத்தில் அவர் பெங்களூரில் இருந்து கடலூர் நோக்கி வந்த ரயில் முன்பு தலையை வைத்து தற்கொலை செய்து கொண்டார். இதனை அடுத்து அங்கு இருந்தவர்கள் இந்த தகவலை காவல்துறையினருக்கு தெரிவிக்க ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நீட் தேர்வுக்கு தயாரான மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கடலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீட் தேர்விற்கு பயந்து மாணவ மாணவிகளின் தற்கொலை தமிழகத்தில் தொடர்ந்து வருவது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

Previous articleநீச்சல் குளத்தில் மூழ்கி சிறுவன் உயிரிழந்த சம்பவத்தில் பயிற்சியாளர் உள்ளிட்ட 3 பேர் கைது
Next articleநடிகர் விஷால் தயாரிப்பு நிறுவனம் படங்களை வெளியிட தடை? நீதிமன்றம் உத்தரவு