ஆளுநர் மாளிகையிலிருந்த விஜய்க்கு போன திடீர் அழைப்பு.. எடுக்கப்படும் முக்கிய முடிவு!!

Photo of author

By Rupa

TVK: குடியரசு தின விழா முன்னிட்டு ஆளுநர் மாளிகை தேநீர் விருந்திற்கு தவெக -விற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் குடியரசு தின விழா வருவதற்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில் ஆளுநர் மாளிகையில் இருந்து ஆளும் கட்சியை எதிர்க்கட்சி என பலருக்கும் தேநீர் விருந்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தவெக கட்சியையும் அழைத்துள்ளனர். பல ஆண்டு காலமாகவே ஆளுநர் மற்றும் திமுகவிற்கு ஒத்துப்போகாத நிலையில் கட்டாயம் இதனை புறக்கணிக்கவே செய்யும்.

ஆனால் தவெக அப்படி கிடையாது, சட்டப்பேரவை கூட்டுத்தொடரை தொடர்ந்து ஆளுநர் வெளிநடப்பு செய்ததை தான் எதிர்த்தாரே தவிர, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமையில் சட்ட ஒழுங்கு சீர்கேடு அடைந்து விட்டது என ஆளுநரை சந்தித்து மனு அளித்தார். இவ்வாறு விஜய் ஆளுநரை சந்தித்தது குறித்து அண்ணாமலை கூட பாராட்டு தெரிவித்திருந்தார்.

அந்தவகையில் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்திற்கு விஜய் செல்வாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆனால் இது குறித்து எந்த ஒரு அறிவிப்பும் தவெக அதிகாரப்பூர்வமான எந்த அறிவிப்பையும் வெளியிடப்படவில்லை. மேற்கொண்டு விஜய் கலந்து கொள்ள நேர்ந்தால் இவர்களுக்கு உண்டான நெருக்கமானது சற்று அதிகரிக்கவே கூடும். அதேபோல திமுக ஆட்சி அதிகாரத்தை தவறுதலாக பயன்படுத்துவது குறித்து பேச அதிக வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.