இந்த பல்கலைக்கழகத்தின் இறுதி பருவத் தேர்வில் திடீர் மாற்றம்! நாளை எக்ஸாம் இல்லை!
கடந்த பிப்ரவரி 8 ஆம் தேதி தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகம் பி எட் சிறப்பு கல்வி பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவித்தது. மேலும் தமிழகத்தில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் பி எட் சிறப்பு கல்வி பட்டப்படிப்பை தொலைநிலைக் கல்வி வாயிலாக சிறந்த முறையில் நடத்தி வரும் பல்கலைக்கழகம் என்றால் அதை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் தான்.
மேலும் இந்த தேர்வை தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் அரசு மற்றும் இந்திய மறுவாழ்வு கழகத்தின் அங்கீகாரம் பெற்ற தமிழ்நாடு முழுவதும் பரவலாக அமைந்துள்ள கல்வி மையங்களின் மூலம் நடத்தி வருகிறது. நடப்பு கல்வி ஆண்டுக்கான பி எட் சிறப்பு கல்வி பட்டப்படிப்புக்கான இணைய வழி விண்ணப்ப படிவம் மற்றும் விளக்கக் கையேடு பல்கலைக்கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு திறனாய் பல்கலைக்கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் தேர்வு அட்டவணையில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவிருந்த இறுதி பருவ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் நாட்களில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெற இருப்பதினால் அந்த தேதிகளை அறிவிக்கப்பட்ட தேர்வுகள் வரும் மே மாதம் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெறும் எனவும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலகம் அறிவித்துள்ளது.