மைக்ரோசாப்ட் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு!! வங்கி மற்றும் விமான சேவையில் தொடர் பாதிப்பு!!

Photo of author

By Rupa

மைக்ரோசாப்ட் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு!! வங்கி மற்றும் விமான சேவையில் தொடர் பாதிப்பு!!

வாட்ஸ் அப் இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவை தொடர்ந்து தற்பொழுது மைக்ரோசாப்ட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விமான நிலையம் ஐடி நிறுவனம் என பல துறைகளில் தங்களது பணிகளை செய்ய முடியவில்லை. கணினியை உபயோகித்துக் கொண்டிருக்கும் பொழுதே ஸ்கிரீன் முன் “ப்ளூ ஸ்க்ரீன் எரர்” என தோன்றியுள்ளது.

இது கிரவுட் ஸ்டிரைக் அப்டேடால் உருவானதாக மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் கூறியுள்ளது. மேற்கொண்டு இதனை சரி செய்யும் பணி செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். மைக்ரோசாப்ட் மென்பொருளானது பாதிப்படைந்து உள்ளதால் அரசு அலுவலகங்கள், வங்கிகள் என பல துறைகள் பெருமளவில் பாதிப்பை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதனால் வாடிக்கையாளர்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது. அதே போல மைக்ரோசாப்ட் நிறுவனம் இதனை சரி செய்யும் நேரத்தை குறிப்பிடாமல் உள்ளதால் மேற்கொண்டு நேர விரையமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமின்றி லண்டனில் இதனால் தனியார் செய்தி ஊடகமானது தனது ஒளிபரப்பையே நிறுத்தியுள்ளதாக எக்ஸ் தளத்தில் கூறியுள்ளனர். இந்த விண்டோ சாப்ட்வேர் முறையாக சரி செய்யும் பட்சத்தில் மீண்டும் பழைய நிலைக்கு அனைத்து துறைகளும் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.