பள்ளிகளுக்கு திடீர் விடுமுறை? அமைச்சர் அவசர ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு?
கொரோனா பரவல் குறைந்த நிலையில் நடப்பாண்டு தான் பள்ளி மற்றும் கல்லூரிகளை நேரடி வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களில் புதிய வகை வைரஸ் காய்ச்சல் பரவி வருகின்றது. இன்புளூயன்சா ஏ வைரஸின் துணை வைகையான இந்த வைரஸ் எச்3என்2 என கூறப்படுகின்றது. இந்த புதிய வகை வைரஸ் 15 வயது உட்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோரை தான் அதிகம் தாக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதே போல் புதுவையில் புதிய வைரஸ் பரவல் காரணமாக தற்போது சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய வகை பரவலின் காரணமாக மாணவ மாணவிகள் காய்ச்சலால் அதிக அளவு பாதிக்கப்படுவதால் எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை விடுமுறை அளிக்க வேண்டும் என நேரு எம்எல்ஏ சட்டசபையில் வலியுறுத்தி இருந்தார். மேலும் புதுச்சேரி மாநிலத்தில் ஆரம்பப்பள்ளி முதல் எட்டாம் வகுப்பு வரை 10 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
அது போலவே தமிழகத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலும் பயிலும் மாணவர்களுக்கான இறுதித் தேர்வு வரும் ஏப்ரல் 24ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறும் என முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த தேர்வை முன்கூட்டியே நடத்தவும் ஏப்ரல் 17ஆம் தேதி முதல் ஏப்ரல் 24ஆம் தேதி வரை இறுதி தேர்வை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இன்புளூயன்சா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. தமிழகத்தில் பிளஸ் டூ பொதுத்தேர்வில் சுமார் 50,000 மாணவர்கள் பங்கேற்காதது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று அவசர ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழ் மற்றும் ஆங்கில பாடத் தேர்வில் ஐம்பதாயிரம் மாணவர்கள் ஆப்சென்ட் இது குறித்து வைரஸ் காய்ச்சல் எதிரொலியாக எட்டாம் வகுப்பு வரை விடுமுறை அளிப்பது குறித்தும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் இன்று அவசர ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.