அண்ணாமலை தமிழிசை திடீர் சந்திப்பு.. அமித்ஷா கொடுத்த அலார்ட்!! முடிவுக்கு வந்த கருத்து வேறுபாடு!!

Photo of author

By Rupa

 

அண்ணாமலை தமிழிசை திடீர் சந்திப்பு.. அமித்ஷா கொடுத்த அலார்ட்!! முடிவுக்கு வந்த கருத்து வேறுபாடு!!

மக்களவைத் தேர்தல் ஆரம்பித்த நாட்களிருந்து அனைவரின் கவனமாக கோவை மாவட்டமும் அங்கு போட்டியிடும் அண்ணாமலை மீதும் தான் இருந்தது.அதுபோல தேர்தல் சமயத்தில் சரமாரியாக பல வாக்குறுதிகளையும் வாரி இறைத்து விட்டார்.முடிவுகள் வெளிவந்ததையடுத்து பாஜக ஒரு இடத்தில் கூட வராததால் பலரது கேலி கிண்டலுக்கும் அண்ணாமலை ஆளாக நேரிட்டது.சோசியல் மீடியா எனத் தொடங்கி எங்கு பார்த்தாலும் அண்ணாமலை ஆட்டு பிரியாணி தான் பேசும் பொருளாக இருந்தது.

இது ஒரு பக்கம் இருக்கையில், பாஜக ஓரிடத்தில் கூட வராததற்கு முக்கிய காரணம் அண்ணாமலை தான் என அனைவரது கவனமும் அவர் மீது திரும்பியது.அதன் வெளிப்பாடாக தமிழிசை சௌந்தர்ராஜன் தனது எக்ஸ் தளத்தில், வியூகம் அமைத்து கூட்டணி அமைத்திருந்தால் கட்டாயம் வெற்றி பெற்றிருக்க முடியும் என்று தெரிவித்திருந்தார்.இதற்கு அண்ணாமலை ஆதரவாளர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

இதுபோல அண்ணாமலை மற்றும் தமிழிசைக்கு இடையே கருத்து வேறுபாடு இருந்த வேளையில் மீண்டும் ஒரு பேட்டியில் தற்பொழுது பாஜக கட்சிக்குள் கட்டுப்பாடு இல்லை.நான் இருக்கும் பொழுது சிலருக்கு அனுமதி வழங்கமாட்டேன்.தற்பொழுது ரவுடிகள் அதிகமாக உள்ளனர் என்று குற்றம் சாட்டினார்.இவ்வாறு இருவருக்கிடையே மோதல்கள் இருந்து வந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு அமித்ஷா இவரை பொது மேடையில் கண்டித்ததாக விவாதம் ஒன்று தீயாக பரவியது.இந்த பரபரப்பு முடிவதற்குள்ளேயே இன்று தமிழிசையின் வீட்டிற்கு அண்ணாமலை சென்று சந்தித்துள்ளார்.