ADMK: சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரானது மார்ச் 14ஆம் தேதி தொடங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது அதிமுகவில் உட்கட்சி மோதல் இருக்கும் பட்சத்தில் இது மாற்றுக் கட்சியினருக்கு சாதகமாகவே அமைந்துள்ளது. இருப்பினும் யாரும் எதிர்பாராத வகையில் ஓபிஎஸ் ஆதரவானது எடப்பாடிக்கு இன்று கிடைத்துள்ளது, இதன் பின்னணியில் இவர்கள் கூட்டணி கூடும் என்றும் அதற்கான ஆரம்ப கட்டம் தான் இது எனவும் பேசி வருகின்றனர்.
அதிமுகவானது சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானத்தை நிறைவேற்றியது. இது குறித்து தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றால் சட்டசபையில் வாக்கெடுப்பு நடத்தப்படும். அப்படி வாக்கெடுப்பு நடத்தும் பொழுது அதிமுக கொறடா, அதன் நிர்வாகிகளுக்கு ஆதரவு செலுத்தும் படி உத்தரவிடுவார். அந்த வகையில் இது குறித்து உத்தரவிட்ட போது யாரும் மறுப்பு தெரிவிக்காமல் ஓபிஎஸ் உட்பட அனைவரும் தனது ஆதரவை நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு பதிவு செய்தனர்.
ஆனால், இந்த ஆதரவில் 63 வாக்குகளும், அதன் எதிர்ப்பில் 154 வாக்குகளும் பதிவாகியது. இதனால் அதிமுகவின் சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானமானது செல்லா காசாக போனது. இந்த தருணத்தில் ஓபிஎஸ் இதற்கு எதிராக கூட வாக்களித்திருக்கலாம். ஆனால் எடப்பாடி பக்கம் இருந்து தனது ஆதரவை கொடுத்துள்ளது அனைத்து கட்சியினரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.