சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்! போக்சோவில் கைது!

Photo of author

By Parthipan K

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்! போக்சோவில் கைது!

Parthipan K

a-teenager-who-raped-a-child-arrested-in-pocso

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர்! போக்சோவில் கைது!

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பாரியூர் நஞ்சகவுண்டன்பாளையத்தை சேர்ந்தவர் சஞ்சய் (20). இவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவர் கோபி பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்து பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்துள்ளார். மேலும் இதுகுறித்து ஈரோடு சைல்டு லைன் ஆலோசகர் தீபக் குமார் என்பவர் கோபி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில்  சஞ்சயை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.