Chido storm: மயோட்டே தீவில் சிடோ புயல் காரணமாக இதுவரை ஆயிரம் பேர் உயிரிழந்து இருக்கிறார்கள்.
தென் ஆப்பிரிக்கா நாட்டின் அருகே மடகாஸ்கர் என்ற தீவு நாடு இருக்கிறது. இதனை சுற்றி உள்ள இந்திய பெருங்கடலில் பல தீவுகள் உள்ளது. இந்த தீவுகள் பிரான்ஸ் நாட்டின் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இந்த தீவுகளில் விவசாயம் மிக முக்கியமாக செய்யப்பட்டு வருகிறது. இது போன்ற தீவுகளில் ஒன்று தான் மயோட்டே தீவு. இந்த தீவில் மூன்று லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மயோட்டே தீவை சிடோ(Chido) என்ற புயல் கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் போது சுமார் 220 கி மீ வேகத்தில் பலத்த காற்று வீசி இருக்கிறது. மிக கன மழை பெய்தும் இருக்கிறது. இதனால் மரங்கள் சாய்ந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் மற்றும் வீட்டின் ,மேற் கூரைகள் காற்றில் சேதமடைந்துள்ளது.
மின்சாரம் துண்டிக்கப்பட்டது என அந்த தீவையே சூறையாடி இருக்கிறது சிடோ புயல். இரவில் நடந்த இந்த புயல் கோர தாண்டவத்தை காட்டி இருக்கிறது. அடுத்த நாள் அந்த தீவை பார்க்கும் போது உருக்குலைந்து உள்ளது. எனவே மீட்பு பணியை பிரான்ஸ் அரசு தீவிரப்படுத்தி இருக்கிறது.
விமானங்கள் மூலம் பிரான்ஸ் நாட்டில் இருந்து மருத்துவர்கள், பொதுமக்களுக்கு உணவுகள், உடைகள் என அத்தியாவசியமான அவற்றை அந்த தீவில் உதவி செய்து வருகிறது. சிடோ புயல் பாதிப்பை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் ஆய்வு செய்து வருகிறார். சிடோ புயல் பாதிப்பால் இதுவரை 1000 பேர் உயிரிழந்தார் இருக்கிறார்கள் என தகவல் வெளியாகி இருக்கிறது.