உடம்பில் மொத்தம் 109 தையல்கள்.. 100-வது தையலின்போது பார்ட்டி வைத்து கொண்டாடிய நடிகர்!!
திரையுலகில் நடிக்கும் ஹீரோக்கள் சண்டைக்காட்சியின்போது கீழே விழுந்து அடிபடுவது வழக்கமான ஒன்றுதான். சில சமயங்களில் கொஞ்சம் பெரிய விபத்தில் கூட சிக்குவதுண்டு. அந்த வகையில் இங்கு ஒரு ஹீரோ இதுவரை தனது உடம்பில் மொத்தம் 109 தையல்கள் போடப்பட்டிருப்பதாக கூறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
அவர் வேறு யாருமல்ல பிரபல ஆக்ஷன் ஹீரோ விஷால் தான். சமீபத்தில் ரத்னம் பட ப்ரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நடிகர் விஷால் கூறியதாவது, “என் உடம்பில் மொத்தம் 109 தையல்கள் உள்ளன. இதில் 100வது தையலின்போது என் நண்பர்களுக்கு பார்ட்டி வைத்தேன். எனது உடம்பில் இத்தனை தையல்கள் விழ காரணம் கனல் கண்ணன் மாஸ்டர் தான்.
நான் ஆக்ஷனில் கலக்குவதாக பலரும் கூறுகிறார்கள். அதற்கும் கனல் கண்ணன் தான் முக்கிய காரணம். நாங்கள் இருவரும் இணைந்து சண்டைக்கோழி படத்தில் பணியாற்றியபோது மாஸ்டர் என்னை முழுமையாக நம்பினார். அந்த படத்தில் க்ளைமேக்ஸ் காட்சியின்போது ஒரு கிக் அடித்ததை பார்த்து அவர் தான் முதல் ரியாக்ஷன் கொடுத்தார்.
அவர் கொடுத்த ரியாக்சன் எனக்கு இன்றும் நினைவிருக்கிறது. அதுமட்டுமல்ல எனது ஆக்ஷனை பார்த்து கிடைச்சுட்டான்யா ஒரு ஜாக்கி சான் என கூறினார்” என்று கூறியுள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் பலரும் உண்மையாகவே விஷால் உடம்பில் இத்தனை தையல்கள் உள்ளதா? என அதிர்ச்சியாக கேள்வி எழுப்பி வருகிறார்கள்.