24 மணிநேரமும் சரக்கு கிடைக்கும் ஊர்!! பொதுமக்கள் அவதி!! குடித்து தள்ளும் குடிமகன்கள்!!
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பாலக்கோடு பகுதியில் 3 அரசு மதுகடைக்கள் உள்ளன. கொரோனா பரவல் காரணமாக மதுக்கடைகளுக்கு நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் பெரும்பாலான மதுகடைக்கள் அவற்றை பின்பற்றுவதில்லை என்பதே நிதர்சனம். இதற்கு இம்மாவட்ட மதுகடைகளும் விதிவிலக்கில்லை என்பதை தாண்டி பொதுவான மதுகடை விதிமுறைகளையும் இவர்கள் பின்பற்றுவது இல்லை. பொதுவாக மதுக்கடைகளில் பகல் 11 மணிக்கு மேல் முதல் இரவு 10 மணி வரையில் மதுவிற்க்கப்படும். தற்போது கொரோனா பரவல் காரணமாக மதியம் முதல் இரவு 8 மணி வரை மதுவிற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் உள்ள கடைகளுக்கு இவை பொருந்தாது. இங்கு சந்துகடைக்கள் அமைத்து மதுபானம் 24 மணிநேரமும் கூடுத்தல் விலை வைத்து விற்கப்படுகிறது. எப்பொழுது வேண்டுமானாலும் மது கிடைப்பதால் கூலி வேலை செய்பவர்கள், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைவரும் அதிகாலையிலேயே மது வாங்கி குடித்துவிட்டு தெருக்களின் ஓரங்களில் விழுந்து கிடப்பதாகவும், குடித்துவிட்டு வாகம் ஓட்டி வருவதால் பாலகோடு பகுதியில் அதிக விபத்துக்களும் நடந்து செல்பவர்கள் மீது மோதுவத்தால் உயிரிழப்புகளும் படுகாயங்களும் நிகழ்வதாகவும் அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்நிலையில் மதுஅருந்துபவர்களின் குடுபத்தினர் ஊரடங்கு காலத்தில் பணமில்லாமல் அவதிபடுகிறோம் எனவே இதற்கு அரசு சரியான நடவடிக்கையை விரைவில் எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.