புளிய மரத்தில் மோதிய வேன் !..ஒருவர் சம்பவ இடத்தில் பலி..மற்றொருவர் நிலைமை கவலைக்கிடம்?..

Photo of author

By Parthipan K

புளிய மரத்தில் மோதிய வேன் !..ஒருவர் சம்பவ இடத்தில் பலி..மற்றொருவர் நிலைமை கவலைக்கிடம்?..

கோபிசெட்டிபாளையம் அருகேவுள்ள ஒத்தக்குதிரை பகுதியைச் சேர்ந்தவர் தான் கோபாலகிருஷ்ணன். இவருடைய வயது 43.இவர் பொலவகாளி பாளையம் பகுதியில் இருந்து வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த வேன் அதிக துணிலோடு ஏற்றுக் கொண்டு சென்றது.

அவருடன் அண்ணாமலை என்பவர் உடன் சென்றிருந்தார். இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் அடுத்த வடுகபாளையம் பிரிவு அருகே வேன் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வேனை லோடு ஏற்றி சென்ற கோபாலகிருஷ்ணன் முந்த முயன்றுள்ளார்.அப்போது நிலை தடுமாறி கோபால  கிருஷ்ணன் ஓட்டி வந்த வேன் ரோட்டோரம் இருந்த புளிய மரத்தில் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

இதில் கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது அண்ணன் அண்ணாமலைய ஆகியோர் பலத்த படுக்காயம் அடைந்தனர். இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே கோபாலகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயம் அடைந்த அண்ணாமலை கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த விபத்தை குறித்து கோபிசெட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு சில மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த விபத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.