பெண்களின் உள்ளாடையை குறிவைத்து திருடும் காமுகன்!! இணையத்தில் வைரலான வீடியோவால் பரபரப்பு!!

0
91
A video of a mysterious person stealing women's underwear has gone viral on the internet
A video of a mysterious person stealing women's underwear has gone viral on the internet

CRIME: மர்ம நபர் ஒருவர் பெண்களின் உள்ளாடையை திருடிச் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீப காலமாக பெண்கள் மீதான குற்றங்கள் அதிக அளவில் அதிகரித்து வருகிறது. வயது வித்தியாசம் இன்றி பாலியல் தொல்லைகள், அத்துமீறல்கள் தொடர் கதையாகவே இருந்து வருகிறது.இந்தியாவில்  பெண்களிடம் பாலியல் ரீதியான குற்றங்கள் ஈடுபடுபவர்கள் மீது போக்சோ என்ற சட்டத்தின் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இந்த சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை மற்றும் தண்டனைகள் வழங்கப்பட்டு வருகிறது என்றாலும் கூட குற்றங்கள் குறைந்தபாடு இல்லை. இந்த நிலையில் இணையத்தில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வீடியோவில் வரும் நபர் பார்ப்பதற்கு டீசண்டாக டீசர்ட், பேண்ட் அணிந்தபடி டிப்டாப்பாக கண் கண்ணாடி அணிந்து வருகிறார்.

அவர்  40 நடுத்தர வயதுடைய நபராக இருக்கிறார். குடியிருப்பு பகுதிகள் இருக்கும் தெருவில் காலை பொழுதில்  மிகவும் சாதாரணமாக  வருகிறார். அவர் அங்குள்ள வீடுகளை நோட்டமிட்டபடி வரும் இவர் தன்னை யாராவது பார்க்கிறார்களா என்றும் திரும்பி பார்த்தபடி கவனித்து வருகிறார். பெண்களின் உள்ளாடைகள் துணிகளை  துவைத்த பின் வீட்டின் வெளியே காய வைத்து இருக்கும் இடத்திற்கு செல்கிறார்.

பின் அங்கு இருந்த உள்ளாடை துணியை திருடி தனது பேண்ட் பாக்கெட்டில் மறைத்து வைத்து கொண்டு செல்கிறார். அந்த நபர் யார் என்று தெரியவில்லை. அந்த நபர் குறித்து போலீசார் தீவர விசாரணை செய்து வருகிறார்கள். பெண்கள் மீதான குற்றச் செய்திகள் தினந்தோறும் வந்துகொண்டு தான் இருக்கிறது.

Previous articleதமிழக மக்களுக்கு அடித்த ஜாக்பாட்.. பொங்கல் தொகுப்பு குறித்து வெளியான மாஸ் அறிவிப்பு!!
Next articleகுகேஷ் இளம் செஸ் சாம்பியன் அவருக்கு தமிழக அரசு ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவிப்பு!!