திருட வந்த இடத்தில் நாயுடன் விளையாட்டு… திருடன் செய்த செயல்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!!

Photo of author

By Sakthi

 

திருட வந்த இடத்தில் நாயுடன் விளையாட்டு… திருடன் செய்த செயல்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…

 

அமெரிக்காவில் ஒரு பகுதியில் உள்ள வீட்டில் திருடச் சென்ற திருடன் ஒருவன் அங்கு இருக்கும் நாயுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

 

பொதுவாக திருடர்கள் வீட்டுக்கு பணம், நகை போன்றவற்றை கொள்ளை அடிக்க வருவார்கள். ஆனால் தற்போதைய காலத்தில் சில இடங்களில் மட்டும் திருடர்கள் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்கள். உதாரணமாக திருட வந்த வீட்டில் சமைத்து சாப்பிட்டு செல்வது, திருட வந்த வீட்டில் ஊஞ்சலில் விளையாடிச் செல்வது, தூங்கி எழுந்து செல்வது போன்று வித்தியாசமான செயல்களை செய்கின்றனர். அது போல வித்தியாசமான சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

 

அமெரிக்காவின் கலிப்போர்னியா மாகாணத்தில் சாண்டியோ நகர் உள்ளது. அந்த சாண்டியோ நகரின் வசிக்கும் நபர் ஒருவரின் கேரேஜில் விலை உயர்ந்த சைக்கிள் ஒன்று இருந்துள்ளது. அந்த சைக்களின் விலை மட்டும் 1.7 லட்சம் ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகின்றது.

 

சம்பவம் நடந்த நாள் இரவில் திருடன் ஒருவன் அந்த வீட்டின் கேரேஜில் நிற்கும் 1.7 லட்சம் மதிப்புள்ள சைக்கிளை திருடுவதற்காக கேரேஜிற்குள் நுழைந்தான். மேலும் அந்த சைக்கிளை வெளியே எடுத்து செல்ல முயற்சி செய்த பொழுது கேரேஜில் இருந்து நாய் ஒன்று ஓடி வந்தது. நாய் ஓடி வருவதை பார்த்த அந்த திருடன் வெளியே செல்லாமல் சைக்கிளை மீண்டும் உள்ளே நிறுத்தி விட்டு நின்றார்.

 

பின்னர் அந்த நாயை பிடித்து கொஞ்சி விளையாடத் தொடங்கினார். அப்பொழுது அந்த திருடன் நாயை பார்த்து ஐ லவ் யூ டூ என்று கூறிய காட்சியும், நாயுடன் கொஞ்சி சிரித்து விளையாடுவது போன்ற காட்சிகளும் அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவானது.

 

சிசிடிவியில் பதிவான அந்த காட்சியை வைத்து வீட்டின் உரிமையாளர் காவல் துறையினரிடம் புகார் அளித்தார். காவல் துறையினர் அந்த வித்தியாசமான திருடனை தேடி வருகின்றனர். இதையடுத்து நாயுடன் திருடன் கொஞ்சி விளையாடும் வீடியோ வெளியானதை அடுத்து சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.