IPL: ஐபிஎல் இன் 16 வது லீக் இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மோத உள்ளது. இதுவரை நடந்த ஐபிஎல் போட்டியில் ஒரு முறை மட்டுமே மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் மும்பை இந்தியன்ஸ் யின் முன்னாள் பயிற்சியாளரான ஜாகிர் கானுடன் ரோகித் சர்மா பேசிய வீடியோ ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர் தற்பொழுது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் பயிற்சியாளராக உள்ளார்.
அப்படி இருக்கையில் இவர்கள் பேசிய வீடியோவானது தற்பொழுது வைரலாகி வருகிறது. அதில் ரோகித் ஷர்மாவின் ஆடியோ சரியாக கேட்கவில்லை. இருப்பினும் ரசிகர்கள் அதன் ஆடியோவின் நுணுக்கத்தை அறிந்து அவர்கள் என்ன பேசினார்கள் என்பதை மாற்றி சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர். அதில், நான் என்ன செய்ய வேண்டுமோ அதை சரியாக செய்து கொண்டிருக்கிறேன், இப்போது செய்ய வேண்டியது என்பது எதுவும் கிடையாது என ரோகித் சர்மா கூறியுள்ளார்.
இது மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் உள்ளிட்டவற்றை குறித்து பகிர்ந்ததாக கூறுகின்றனர். தற்பொழுது மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா உள்ள நிலையில் நட்சத்திர வீரராக இருக்கும் ரோகித் சர்மா தனது ஆட்ட நிலையில் இருந்து சற்று விலகியே உள்ளார். இதற்கு முக்கிய காரணம் கேப்டன் பதவி இல்லாதது என கூறுகின்றனர்.
மேற்கொண்டு இந்த வீடியோவை மும்பை இந்தியன்ஸ் வெளியிட்டுள்ள நிலையில் தற்போது அதனை நீக்கியுள்ளது. இன்று நடைபெறும் போட்டியில் ரோகித் சர்மா சரியான ஆட்டத்தை களம் காணாமல் விட்டால் கட்டாயம் அணியிலிருந்து நீக்கம் செய்யக்கூடும் எனக் கூறுகின்றனர்.