நிலச்சரிவில் சிக்கிய கிராமம்! 22 பேர் உடல்கள் மீட்பு !
கடந்த மாதம் முதல் வாரத்தில் அதிகளவு மழை பொழிந்து வந்தது.அதனையடுத்து கடந்த மாதம் இறுதியில் மழை சற்று குறைய தொடங்கியது.அதனால் மக்கள் அவரவர்களின் இயல்பு நிலைக்கு திரும்பினார்கள்.இந்நிலையில் நேற்று இரவு முதல் அனைத்து இடங்களிலும் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்து வருகின்றது.அதனால் சில இடங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து வெனிசூலாவில் தொடர் மழை காரணமாக ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் ஒரு சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் தலைநகர் காரகாசில் பகுதியில் உள்ள கிராமத்தில் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.மேலும் ஆற்றில் வெள்ளம் அபாய அளவை தாண்டிய நிலையில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டிருக்கும் என கூறப்படுகின்றது.இந்த நிலச்சரிவினால் ஏராளமான வீடுகள் சிதைந்துள்ளது.வீடுகளில் வசித்தவர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர்.மேலும் மீட்பு குழுவினர் போராடி இதுவரை 22பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளது.
மேலும் 52 பேர்களுக்கு என்ன நடந்தது என தெரியாமல் தேடி வருகின்றனர்.மேலும் அதே பகுதியில் நிலச்சரிவால் பல வீடுகள் ,வணிக வாளகங்கள் மற்றும் மரங்கள் தெருக்களில் விழுந்து கிடக்கின்றது.மேலும் அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிவிப்பில் இந்த பெருந்துயர சம்பவத்தை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.