கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் காயத்துடன் சுற்றி திரிந்த காட்டு யானை உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட நெல்லித்துறை பகுதியில் கடந்த சில நாட்களாக ஒரு காட்டு யானை வயிறு மற்றும் முழங்கால் காயத்துடன் சுற்றி திரிந்தது.இந்த யானைக்கு வயது சுமார் 20 இருக்கும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.அந்த யானையை 2 கும்கி யானைகள் வரவழைத்து அதனை பிடித்து சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முயன்றனர்.
பின்பு ,அந்த யானையைப் பிடிக்க மயக்க ஊசி செலுத்தி சிகிச்சை அளித்தனர்.அந்த யானையின் நடமாட்டத்தை ட்ரோன் கேமரா மூலம் வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் காயமடைந்த அந்த காட்டு யானை மலைப்பகுதியில் இருந்து சரிந்து விழுந்து உயிரிழந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களாக அப்பகுதியில் மழை கனமழை பெய்து வருவதால் சுமார் 15 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் யானை சரிந்து விழுந்து உயிரிழந்ததாக வனத்துறையினர் தகவல் தெரிவித்தனர்.