கடலூரில் மர்ம நபர்  ஆபாசமாக பேசியதால் பெண் தற்கொலை?

Photo of author

By Parthipan K

கடலூரில் மர்ம நபர்  ஆபாசமாக பேசியதால் பெண் தற்கொலை?

கடலூர் அருகே சன்னியாசி பேட்டை சேர்ந்தவர் கோட்டையம்மாள் இவர்களுடைய வயது 32. இவருக்கும் ராமராஜன் என்பவருக்கும் சில வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவரும் அவ்வப்போது சண்டையிட்டு கொள்வார்கள்.

கணவன் ராமராஜனுக்கும் கோட்டையம்மாளுக்கும் கருத்து வேறுபாடு ஏற்ப்பட்டது.இதன் காரணமாக இருவரும் பிரிந்து சென்றனர் .இதில் கோட்டையம்மாள் கடந்த ஒரு வருடமாக தனிமையில் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று இரண்டு மர்ம  நபர்கள் கோட்டையம்மாளை தொலைபேசியில்  அழைப்பை விடுத்தனர்.

அதில் அந்த இரு நபர்களும் கோட்டையம்மாளை  அசிங்கமான வார்த்தையில் பேசியுள்ளார்கள். அது மட்டுமில்லாமல் கோட்டையம்மாள் கற்பை மானபங்கம் படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்த கோட்டையம்மாள் தன் வீட்டில் எலிகளுக்கு வைத்திருக்கும் எலி பேஸ்ட்டை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

வெகு நேரம் ஆகியும் கதவை திறக்காத கோட்டையம்மாள் அக்கம் பக்கத்தினர் குரல் கொடுத்தும் கதவை திறக்கவில்லை. இதனால் ஒரு யூகத்தின் அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது எலி பேஸ்டை சாப்பிட்டு வாயில் நுரை தள்ளியபடி தரையில் மயக்கம் போட்டு கிடந்துள்ளார்.

இந்நிலையில் அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்த கோட்டையம்மாள் கொடுத்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் சம்பந்தப்பட்ட நண்பர்கள் யார்? அவர்கள் எந்த ஊரைச் சேர்ந்தவர்கள்? யார் சொல்லி இப்படி செய்தார்கள் என பல கோணங்களில்  விசாரித்து வருகின்றனர்.