Breaking News

இந்த மாவட்டத்தில் குரங்கம்மை நோய் தொற்றுக்கு பெண் பலி! சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு!

இந்த மாவட்டத்தில் குரங்கம்மை நோய் தொற்றுக்கு பெண் பலி! சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு!

இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்த நிலையில் நடப்பாண்டில் தான் கொரோனா பரவல் சற்று குறைந்து காணப்படுகிறது. இந்நிலையில் குரங்கமை  பாதிப்பு கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகின்றது. இதனையடுத்து பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் பரிமளா (35). இவருக்கு கடந்த மாதம் உடல் முழுவதும் கொப்பளங்கள் ஏற்பட்டுள்ளது. அதனால் அவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு குரங்கமை பாதிப்பு இருக்கும் என எண்ணி அவருடைய ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. பிறகு அந்த பெண்ணிற்கு குரங்கமை பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. 15 நாட்கள் தொடர் சிகிச்சையில் பரிமளா இருந்து வந்துள்ளார்.மேலும் மேல் சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி கடந்த பதினெட்டாம் தேதி பரிமளா உயிரிழந்துள்ளார்.

Leave a Comment