சென்னையில் மூடப்படாத மழைநீர் வடிகால் ஆள் நுழைவு குழியில் தவறி விழுந்த பெண் – பரிதாப நிகழ்வு!
வடகிழக்கு பருவமழை ஒருசில நாட்களுக்கு முன்பு தொடங்கிய நிலையில் பல்வேறு இடங்களில் கனமழையும் சில இடங்களில் மிக கனமழையும் பெய்து வருகின்றது. இந்நிலையில் சென்னை பெரம்பூர் அடுத்த பட்டாளம் பகுதியில் மிக கனமழை கடந்த 3 தினங்களாக பெய்து வருகின்றது. அப்பகுதியில் சாலை முழுவதும் தண்ணீரி மூழ்கியுள்ளது
இதனால் மக்களின் நடைமுறை வாழ்க்கையில் பெரும் பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது. சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத நிலையின் காரணமாக மக்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இச்சூழலில் சில வாகனங்கள் தண்ணீரில் மிதந்த படியும் சென்று கொண்டு தான் இருக்கின்றன.
இந்நிலையில் பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் பெண் ஒருவர் நடந்து சென்று கொண்டு இருந்தார், அப்போது அங்கு உள்ள வடிகாலின் ஆள் நுழைவு மூடியை அகற்றி சுத்தம் செய்து விட்டு அதை மீண்டும் சரியாக மூடாத காரணத்தால், அந்த பெண் வடிகாலுக்குள் தவறி விழுந்தார். அதனை கண்ட சாலையில் சென்று கொண்டு இருந்தவர்கள் அந்த பெண்ணை மீட்டனர்.
பின்னர் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று முதலுதவி அளிக்கப்பட்டது. சரியான நேரத்தில் முதலுதவி அளிக்கப்பட்டதால் அவர் காப்பாற்றப்பட்டார். இத்தகவல் அறிந்து அங்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், வடிகால் நுழைவுகுழியை மூடினர். மேலும் இவ்வாறு நடந்தால் ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார் .