Kanyakumari: கன்னியாகுமரி அருகே ஓடும் பேருந்தில் பணம் திருட்டில் ஈடுபட்ட பெண் கையும் களவுமாக பிடிபட்டார்.
நான் பேருந்தில் பயணிக்கும் போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். திருட்டு குற்றங்களில் ஈடுபடுபவர்கள் சர்வசாதாரணமாக போது மக்கள் போல் நடித்து பணத்தை திருடிச் செல்வார்கள். பேருந்தில் திருட்டு குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், கன்னியாகுமரி அருகே நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதாவது, கருங்கல் அருகே உள்ள திக்கணங்கோடு கிழக்கு தாராவிளையை சேர்ந்த சுனில் ராஜ், அவருடைய மனைவி சுபஜா (வயது 30). சுபஜா ஒப்பந்தம் அடிப்படையில் அரசு பள்ளியில் சத்துணவு ஊழியராக வேலை செய்து வருகிறார். இவர் நேற்று டிசம்பர்-12 தனது சொந்த ஊரான திக்கணங்கோட்டுக்கு செல்ல செம்பிலாவிளையில் பகுதியில் இருந்து அரசு பேருந்தில் பயணம் மேற்கொண்டு இருந்தார்.
இந்த நிலையில் திக்கணங்கோட்டுக்கு பஸ் ஸ்டாண்டிற்கு பாஸ் வந்த உடன் இறங்கிய சுபஜா தனது கைப்பை பார்த்து அதிர்ந்து போய் இருக்கிறார். அவர் கொண்டு வந்த 21 ரூபாய் பஸ்ஸில் திருடு போன தை அறிந்து கொண்டு தான் வந்த பஸ்ஸை ஆட்டோ மூலம் பின் தொடர்ந்து இருக்கிறார். மேலும், மத்திகோடு அரசு பள்ளி அருகே பஸ்ஸை மறித்து டிரைவர், கண்டக்டரிடம் தனது பணம் திருடு போய் உள்ளதை கூறி இருக்கிறார்.
மேலும் அந்த பஸ்ஸில் உள்ள அனைத்து பயணிகளையும் சோதனை செய்ய காவல் நிலையத்திற்கு செல்ல வேண்டும் என கூறி இருக்கிறார். அப்போது, பெண் ஒருவர் பஸ்ஸில் இருந்து தப்பி செல்ல முயன்று இருக்கிறார். அவரை சக பயணியர்கள் மடக்கிப்பிடித்து இருக்கிறார்கள். அவர் அமர்ந்து வந்த சீட்டுக்கு அடியில் 21 ஆயிரம் பணம் இருப்பதை பார்த்து அதிர்ந்து உள்ளார்கள்.
போலீசாரிடம் அந்த பெண்ணை ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தூத்துக்குடி மாவட்டம் சமீர் வியாஸ் நகரை சேர்ந்த பரமசிவம் மனைவி கருப்பாயி (வயது 40) பண திருட்டில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.